பொல்லார்ட் ஐபிஎல்லில் ஓய்வு அறிவிப்பு மும்பை இந்தியன்ஸில் புதிய பதவியை பெற்றார். மேற்கிந்திய தீவுகள் அணியில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவர் கைரன் பொல்லார்ட் அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தார். மும்பை இந்தியன்ஸில் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் IPL தொடர் ஓவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகின்றது. கொரோனா தாக்கத்தால் தடைப்பட்டிருந்தது. இந்தியாவில் நடத்தாமல் ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த போட்டிகள் நடைபெற்றது. அந்த போட்டியில் புதியதாக ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான அணி இறுதி போட்டியில் கோப்பையை வென்றது.
மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை பெற்றுள்ளது. இருப்பினும் இந்த முறை படுதோல்விகளை சந்தித்து வந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கடும் விமர்சனங்களை வைத்தனர். இந்நிலையில், தற்போது நவம்பர் 15 க்குள் அந்ததந்த அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
இதையும் படியுங்கள்: IND VS NZ: இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் நியூசிலாந்து அணி அறிவிப்பு

அடுத்த மாதம் மினி ஏலம் நடத்தப்பட உள்ளது அதில் புதிய வீரர்களை அந்ததந்த அணிகள் ஏலம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அனுபவ வீரரான கைரன் பொல்லார்ட்டை வெளியேற்றியது. இதனால் மும்பை ரசிகர்கள் மிகுந்த சோகம் அடைந்தனர்.
ஆல்ரவுண்டராக செயல்பட்டு வருபவர் பலமுறை மும்பை இந்தியன்ஸில் வெற்றிக்கு வழிவகுத்துள்ளார் என பேசப்பட்டு வந்த நிலையில் கைரன் பொல்லார்ட் ஐபிஎல் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் பல மர்மங்கள் அவரை நோக்கி சூழ்ந்தது தற்போது மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இதனால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர். பொல்லார்ட் பவுலிங், பேட்டிங், பீல்டிங் என ஆல்ரவுண்டராக செயல்பட்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பக்கபலமாக பல ஆண்டுகளாக இருந்து வருபவர்.
இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.