புதுச்சேரியில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் பற்றிய தொகுப்பு

0
7

புதுச்சேரியில் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றிய தகவல்கள்: புதுச்சேரி ஓர் யூனியன் பிரதேச நாடாக இருந்து வருகின்றது. இந்தியாவில் ஏழு யூனியன் பிரதேசங்கள் உள்ளன அதில் ஓன்று புதுச்சேரி. இந்த நகரம் இந்திய தீபகற்பத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஓரு பழைய பிரஞ்சு நகரமாகும். இந்த புதுச்சேரியை பாண்டி என்றும் புதுவை என்றும் சுருக்கி கூறுவதும் உண்டு.

இந்த நகரம் முதலில் பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டிலிருந்து இந்நகரம் புதுச்சேரி என்று மாற்றப்பட்டு அழைக்கப்பட்டு வருகிறது. இந்த நகருக்கு பல உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருடம் தோறும் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர்.

புதுச்சேரியில் ஏராளமான இடங்கள் மனதை கவரும் வண்ணம் அமைந்து மகிழ்ச்சியை அள்ளித் தரும் சுற்றுலாவாக இருந்து வருகிறது. போக்குவரத்து வசதிகளும் அதிகமாக உள்ளதால் எவ்வித சிரமமும் இன்றி கண்டு களிக்கலாம். எண்ணற்ற பழமை வாய்ந்த இடங்களும் குழந்தைகளை மகிழ்விக்கும் பூங்காக்களும் புல்வெளிகளும் கடற்கரை மணல்களும் கடற்கரை நடை பயிற்சிகளும் புராதரமான கோவில்களும் பிரஞ்சுக்காரர்களின் அழுகு நிறைந்த கட்டிடக் கலைகளும் இங்கு பார்த்து மகிழலாம்.

சென்னை மெரினாவிற்கு அடுத்தப்படியாக கடற்கரையை பார்த்து மகிழ்ந்து குடும்பத்துடன் குதுகலிக்க ஏற்ற இடமாக இருந்து வருகிறது. புதுவையின் சிறப்புகளில் ஓன்று நிறைய பணத்தை வைத்துள்ளவர்களும் பலவகைகளில் மகிழலாம். அதே வேலையில் பணவசதி குறைவானவர்களும் இந்த நகரை எளிமையான முறையில் கண்டுகளித்து அதற்கேற்ப மகிழலாம். இது போன்ற இடங்களை சுற்றிப் பார்க்கவும் இங்கு நிறைய இடங்கள் உள்ளது.

புதுச்சேரி தாவரவியல் பூங்கா: (Puducherry Botanical Garden)

புதுச்சேரியில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் பற்றிய தொகுப்பு

1826 ஆம் ஆண்டு சி.எஸ்.பெர்ரோடெட் என்பவரால் இந்த தாவரவியல் பூங்கா மற்றும் மீன் காட்சியகம் தொடங்கப்பட்டது. இந்த பூங்காவில் அரிய வகை தாவரங்களை கண்டு மகிழ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக கலந்து கொண்டு ரசித்து வருகின்றனர். மேலும், ஆய்வியல் பயிலும் ஆராய்ச்சி மாணவர்களும் தாவாரவியல் பூங்காவை வந்து பார்த்து பயன் பெறுவர்.

இங்கு ஏராளமான அரிய வகை மரங்களும் செடிக் கொடிகளும் நிறைய உண்டு மரநிகழ் மனதிற்கும் உடலுக்கும் நல்ல இன்பத்தை நல்கும் என்பதில் ஆச்சரியமில்லை. இந்த தாவரவியல் பூங்கா புதுச்சேரியில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மிகவம் அருகில் இருக்கிறது. மேலும், குறைந்த கட்டண முறையுடன் கூடிய பூங்காவை ரசிப்பதும் அங்கு உள்ள இடங்களில் புகைப்படம் எடுத்து மிகழ்வதையும் சுற்றுலா பயணிகள் தவராமல் சென்று வரும் இடமாக இருக்கின்றது.

புதுச்சேரி மணக்குல விநாயகர்: (Puducherry Manakula Vinayagar)

புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற தலங்களில் முதன்மையானதாக இருந்து சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருபவர். முழுமுதற் கடவுளான விநாயகர் இந்த சன்னதிக்கு முன்பகுதியில் லட்சுமி என்ற யானை அங்கு வரும் பக்தர்களுக்கு தினமும் ஆசிர்வாதம் அளித்து வருகின்றது. இந்த கோவிலில் அந்த யானை 5 வயது இருக்கும் பொழுது வந்ததது. அங்கு வரும் பக்தர்கள் சுற்றுலா பயணிகள் ஆசிர்வாதம் பெற்று அதனருகில் புகைப்படம் எடுத்தும் மகிழ்வர்.

பெண் யானைகளுக்கு தந்தம் வளர்வது தெரியாது ஆனால், ஆயிரம் யானைகளுக்கு ஓரு யானைக்கு மட்டும் தந்தம் இருப்பது தெரியும் அதில் ஓன்று இந்த லட்சுமி யானை புதுச்சேரிக்கு அழகு சேர்க்கும் விஷயங்களில் இதுவும் ஓன்று.

மேலும், சக்தி வாய்ந்த கடவுளாக இருந்து பக்தர்களுக்கு அருளாட்சி வழங்கி வரும் கஜமுகனை அனைவரும் தரிசனம் செய்து வருவர். இந்த கோவிலின் சுற்றுச்சுவர்களில் 40 வகையான விநாயகர் உருவங்கள் வண்ணம் தீட்டபட்டிருக்கின்றது. தினமும் இக்கோவிலுக்கு 5000 க்கும் அதிகமானோர் வந்து செல்கின்றனர்.

அரவிந்தர் ஆசிரமம்: (Aurobindo Ashram)

அரவிந்த கோஷ் 1926ல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற போது நவம்பர் 24ம் தேதி சீடர்கள் முன்னிலையில் இவ்விடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆசிரமத்தின் முக்கிய நோக்கம் மன அமைதி, ஆன்மீக அறிவு என்பதாகும். 1950ல் ஸ்ரீ அரவிந்தர் உயிரிழந்ததற்கு பிறகு அவரின் சீடர்களில் ஓருவர் இந்த ஆசிரமத்தை நடத்தி வருகின்றார்.

இந்த ஆசிரமத்திலேயே ஸ்ரீ அரவிந்தரின் சமாதி அமைந்துள்ளது. இந்த ஆசிரமத்தை ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விரும்பி இவ்விடத்திற்கு வந்து அமைதியை நாடி வருகின்றனர். உள் அரங்குகள் பார்ப்பதற்கு சிறப்பான தோற்றத்தை அளிப்பதுடன் மன அமைதியை தருவதாக இருக்கின்றன. ஆசிரமத்தில் நூலகம், அச்சகம், கலைக்கூடம் மற்றும் பிற இடங்கள் உள்ளது.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மலர் செண்டுகளை சமாதியில் இட்டு தியானம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டு வருகின்றனர். இன்றளவும் விழாக்காலங்களில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து தங்கி மன அமைதியை பெற்று வருகின்றனர்.

ராக் பீச்: (Rack Beach)

புதுச்சேரியின் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்த்து வரும் இடங்களில் முதன்மையானதாக கருதப்படும் இடம் ராக் பீச் அதிகாலையில் நடைபயிற்சி, ஜாக்கிங், ஆசனங்கள் செய்யவும் அதிகாலை கடற்கரை பகுதியை ரசிக்கவும் இதை அனைவரும் விரும்புவர். இந்த கடற்கரை மையப்பகுதியில் மகாத்மா காந்தி சிலை நின்ற வடிவில் மண்டபம் போல் அமைக்கப்பட்டிருக்கும் அது புதுச்சேரி கடற்கரைக்கு மேலும் அழுகு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

ஏராளாமான கடைகள், திண்பண்டங்கள், உணவு விடுதிகள், அழகு நிறைந்த கட்டிடங்கள் என வரிசைக்கட்டி நிற்கும் இந்த கடற்கரைக்கு அதிகாலையும் அந்தி சாயும் மாலை நேரப்பொழுதையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், கடல் அலைகளின் அழகை பாராங்கற்களில் அமர்ந்தவாறு உப்பங்காற்றுன் ரசிப்பது அனைவரையும் கவர்ந்து வருகிறது.

பௌர்ணமி போன்ற நாட்களில் சென்றால் இரவு 7 மணிக்கு கடல்நீரில் நிலா தவழ்வது போல தோற்றம் அளிக்கும். இந்த இனிமையான காட்சிகள் நம் குடும்பத்தினருக்கு மிகுந்த மகிழ்வை தரும் என்பதில் ஐயமில்லை.

கத்தோலிக்க தேவாலயம்: (Catholic Church)

இயேசுவின் புனித இதயத்தின் பசிலிக்கா மிகவும் முக்கியமான இடங்களில் ஓன்றாகும். இது புதுச்சேரியில் 1908ம் ஆண்டு கோதிக் கட்டிடக் கலைக் கொண்டு பிரெஞ்ச் அமைப்புகளால் நிறுவப்பட்டது. 2011ம் ஆண்டு பசிலிக்கா என்ற அந்தஸ்த்தை பெற்றது. இது இந்தியாவில் 21 இடங்களில் அமைந்துள்ள பசிலிக்காவில் ஓன்றாக விளங்குகிறது.

லத்தின் மொழியில் விலியா வார்த்தைகளுடன் நுழைவு வாயிலில் இயேசு மற்றும் அன்னை மரியாவின் இதயம் என்று பொறிக்கப்பட்டுள்ளது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் புனிதர்களின் வாழ்க்கையிலிருந்து பல்வேறு நிகழ்வுகளை சித்தரிக்கும் அரிய கறை படிந்த கண்ணாடி பேனல்களும் இதில் உள்ளன. புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ஈஸ்டர் போன்ற நிகழ்வுகள் தேவாலயத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

உலகம் முழுவதிலும் கிறித்துவர்கள் இங்கு வந்து அமைதியை பெற்று செலவர். அழகு மிகுந்த கட்டிடங்களில் இந்த தேவாலயமும் ஓன்றாக திகழ்கின்றது.

பாரதி பூங்கா: (Bharti Park)

இந்த பாரதி பூங்கா கடற்கரைக்கு முன்னர் உள்ளது. இந்த பூங்காவில் குழந்தைகள் புல்வெளிகளில் விளாயடவும் மரநிழலில் இளைப்பாறவும் சிறப்பானதொரு இடமாக இருக்கின்றது. இரவு நேரங்களில் இந்த பூங்கா முழுவதும் மின் விளக்குகளால் ஜெலிக்கும். இரவில் நீருற்று வண்ண வண்ண நிறங்களில் மீளிரும். புதுச்சேரியில் அமைந்துள்ள பெரிய பூங்காவாகும்.

புதுச்சேரி பிரஞ்ச் காலணி: (Puducherry French Colony)

இந்த காலணி பிரஞ்ச்காரர்களால் உருவாக்கப்பட்டதாகும். இங்கு சென்று பார்த்தால் வெளிநாட்டில் இருப்பது போல உணர்வை தரும் அந்த அளவிற்கு அழுகு நிறைந்த கட்டிடங்களை கொண்டதாக இருக்கும். இந்த இடத்தில் நிறைய படங்களின் பாடல்கள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிங்களிலேயே தங்குவதற்கும் வசதி உள்ளது. இதற்கு பல ஆயிரம் ரூபாய்களை செலவழிக்க வேண்டியதாய் இருக்கும். ஓரு நாளுக்கு 5000 முதல் வசூலிக்கப்படும். இதில் போட்டோ ஷூட் எடுப்பதற்கும் கனிசமான தொகை வசூலிக்கப்படுகிறது.

இது போன்ற பல்வேறு விதமான செய்திகளையும் அறிந்து கொள்ள தலதமிழ் இணையதளத்தை பார்வையிடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here