தளபதி விஜய்: நடிகர் விஜய் நடிப்பில் இந்தாண்டு பொங்கலன்று வெளிவந்த ‘வாரிசு’ படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. குடும்ப பின்னணியில் அமைந்துள்ள இந்த படத்தினை குடும்பங்கள் சேர்ந்து கொண்டாடி வருகின்றனர். தமன் இசையில் அமைந்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் விஜய் ரசிகர்களைை ஆட்டம் போட வைத்திருக்கிறது. குறிப்பாக ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ பாடல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்க வைத்திருக்கிறது. தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்க தில் ராஜூ இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் தமிழில் ‘வாரிசு’ என்றும் தெலுங்கில் ‘வாரிசுடு’ என்று வெளியாகியுள்ளது.
பொங்கல் தினத்தன்று வெளியான’வாரிசு’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இதுவரை விஜய் நடிப்பில் பொங்கலையொட்டி வெளியான படங்களின் பட்டியலை காணலாம்.
1996 – கோயமுத்தூர் மாப்ளே
1997- காலமெல்லாம் காத்திருப்பேன்
2000 – கண்ணுக்குள் நிலவு
2001- ப்ரண்ட்ஸ்
2003 – வசீகரா
2005- திருப்பாச்சி
2006 – ஆதி
2007 – போக்கிரி
2009 – வில்லு
2011 – காவலன்
2012 – நண்பன்
2014 – ஜில்லா
2017 – பைரவா
2021 – மாஸ்டர்
2023 – வாரிசு
விஜய் நடித்த எந்த படமும் இதுவரை ஓடிடி தளத்தில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.