சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த 2.0 திரைப்படத்தின் வசூலை முறியடித்த மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 1.
அமெரிக்காவில் லைகா தயாரிப்பில் வெளியான ரஜினிகாந்த்தின் சூப்பர் ஹிட் படமான 2.0 படத்தின் மொத்த வசூலை பொன்னியின் செல்வன் 10 நாட்களில் வசூலித்து சாதனை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் நடிகர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான படம் 2.0 அமெரிக்காவில் 5.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலாக எடுத்திருந்தது. அதாவது 55 லட்சம் அமெரிக்க டாலர்களை 2.0 திரைப்படம் வசூலித்தது. இப்படத்தையும் லைகா நிறுவனம் தயாரித்திருந்தது.

அந்த படத்திற்கு பிறகு அமெரிக்காவில் வேறு எந்த திரைப்படமும் அந்த அளவிற்கு வசூல் வேறு எந்த படமும் இன்று வரை செய்யவில்லை. அந்த சாதனையை 2.0 எடுத்திருந்தது.
தற்போது, அந்த படத்தின் சாதனையை பொன்னியின் செல்வன் திரைப்படம் முறியடித்துள்ளது. பொன்னியின் செல்வன் வெளியாகி 10 நாட்களில் அந்த சாதனையை முறியடித்தது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்த 10 நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இப்படம் உலக அளவில் பெரும் சாதனையை நிகழ்த்தி வருகிறது. இந்த படத்தையும் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் மிக பெரும் வெற்றி அடைய மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுவது. எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுத்ததே காரணம். மேலும், இப்படத்தை இயக்கிய மணிரத்னம் மற்றும் நடிகர்கள் பட்டாளம்.
இப்படத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, பிரபு, விகரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லஷ்மி, த்ரிஷா என பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் உருவாகி தமிழ் சமூகத்தின் வரலாற்றை இப்படத்தின் மூலம் தெரிவித்துள்ளார். இசையில் ஏ.ஆர்.ரகுமான் தன் புயலை நிறுபித்துள்ளார்.
இதன் மூலம் கடந்த சில ஆண்டுகளாக 2.0 வசம் இருந்த அமெரிக்காவில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையை பொன்னியின் செல்வன் தற்போது முறியடித்துள்ளது. இப்படம் மேலும் பல சாதனைகளை வசூல் அளவில் செய்யும் என்று சினிமா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.