பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த 30ம் தேதி வெளியாகி உலக அளவில் பெரும் வெற்றி பெற்று வசூலில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகின்றது. தற்போது உலக அளவில் 400 கோடி வசூலை பெற்று வந்துள்ளது. மேலும், வரும் நாட்களில் இதன் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான மிக பிரம்மாண்ட படம் பொன்னியின் செல்வன் பாகம் 1 இந்த படத்தின் கதை எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தின் கதையை தழுவியது. இதை இரண்டு பாகங்களாக வடிவமைத்து திரையில் காட்சிப்படுத்தியுள்ளார் மணிரத்னம்.
இப்படத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஜெயராம், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, சரத்குமார், ஐஸ்வர்யாராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லஷ்மி என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் தொடர் வெற்றியால் சினிமா உலகம் முழுவதும் பெரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளது.

நடிகர் ரஜினி நடிப்பில் உருவான 2.0, உலகநாயகன் நடிப்பில் உருவான விக்ரம், இப்படங்களின் வசூலை தற்போது பொன்னியின் செல்வன் முறியடித்து வருகின்றது. மேலும், தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் வெளியாகி 13 நாட்களில் 165 கோடி வசூல் ஆகியுள்ளது. உலக அளவில் 400 கோடியை தொட்டுள்ளது. வரும் நாட்களில் இந்த திரைப்படத்தின் வசூல் வேட்டை பல மடங்காக மாறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முந்தைய இடத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் பிடித்துள்ளது. அந்த திரைப்படம் ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் 180 கோடி ரூபாய் (Life Time) வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.
அந்த சாதனையை பொன்னியின் செல்வன் இந்த வார இறுதிக்குள் முறியடிக்கும் என சினிமா துறையினர் கூறுகின்றனர். தமிழகம் தவிர இந்தியாவின் பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பொன்னின் செல்வன் ஈட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை காண தமிழக ஆளூநர் என்.ஆர்.ரவி இன்று சென்னையில் உள்ள பினிகஸ் மாலிற்கு சென்று படத்தை பார்த்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.