ரசிகர்களின் ஆராவாரத்திற்கு மத்தியில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதிலும் இன்று வெளியானது. இதனை ரசிகர்கள் வெடி வெடித்தும் தாரத்தப் பட்டைகளுடனும் திரையரங்கிற்கு வந்து முதல் காட்சியை பார்த்து ரசித்து நம் சோழப் போரரசின் ராஜியத்தை புகழ்ந்து வருகின்றனர்.
எழுத்தாளர் கல்கி என்பவர் எழுதிய பொன்னியின் செல்வன் கதையை சுருக்கமாக திரைப்படத்திற்கு ஏற்ப அதனை சீர்படுத்தி உருவான திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்திற்கு மணிரத்தனம் இயக்கியுள்ளார். இப்படத்தை லைகா நிறுவனத்தின் நிறுவனர் சுபாஷ்கரன் தயாரிப்பு பணிகளை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி மிகப் பெரும் வரவேற்பை பெற்று வந்தது.
இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், பிரபு, ஐஷ்வரியா, திரிஷா, லஷ்மி என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீடு மிகப் பிரம்மாண்ட முறையில் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழக மக்களின் சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகன் தலைமை ஏற்று நடத்தினர் என்பது நாம் அறிந்ததே.

இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று அதிகாலை உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் ஓளிபரப்பாகியது. தமிழர்களின் மிக முக்கியமாக சோழர்களை பற்றி பேசும் படமாக இருக்கின்றது.
இந்த படத்தை சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கிற்கு ஜெயம்ரவி ரசிகர்களுடன் அமர்ந்து முதல் காட்சியை பார்த்து மகிழ்ந்தார். பார்த்திபன் தஞ்சையில் உள்ள சாந்தி திரையரங்கிற்கு வந்து ரசிகர்களுடன் ரசிகராக இப்படத்தை பார்த்து ரசிகர்களுடன் செல்பி எடுத்து கொண்டு மகிழ்ந்தார்.
அனைத்து ரசிகர்களாலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படமானது இன்று திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.