பொன்னியின் செல்வன் கடந்த 30ந் தேதி உலகம் எங்கும் திரையரங்குகளில் ரீலிஸ் ஆகி செம ஹிட் ஆகி வருகிறது. இதல் நாளில் மட்டும் உலக அளவில் கிட்டத்தட்ட 80 கோடியை வசூலை எடுத்து புதிய சரித்திரம் படைத்தது.
எழுத்தாளர் கல்கி என்கின்ற கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலை படமாக்க பல வருடங்களாக பலர் முயற்சி செய்துள்ளனர். எம்.ஜி.ஆர் முதல் கமலஹாசன் முதல் இந்த பொன்னியின் செல்வத்தை படமாக எடுக்க பல முயற்சிகளை எடுத்தார். இருப்பினும் யாராலும் அதை திரைப்படமாக எடுக்க முடியவில்லை.
இயக்குனர் மணிரத்னம் அதை மெய்பித்து காட்டி உள்ளார். இந்த கதையை படமாக எடுக்க பல வருடமாக காத்திருந்ததாகவும் என் கனவு இன்றுதான் நிறைவேறியதாகவும் மணிரத்னம் கூறியுள்ளார். மிக பிரம்மாண்டமாக அனைத்து கதாபாத்திரத்தையும் அமைத்து காட்சி மூலம் சிறப்பாக பணியாற்றி உள்ளனர் படக்குழுவினர்.

இப்படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், ஐஸ்ரியா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லஷ்மி என பல முன்னணி நடிகர்கள் நடித்து மிக பெரும் சரித்திரத்தை நிகழ்தியுள்ளனர். இப்படத்தின் பாடலுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் அனைவரையும் கவர்ந்து வந்த நிலையில் படம் மிக பெரும் விருந்தாக ரசிகர்களுக்கு அமைந்துள்ளது.
பொன்னியின் செல்வன் 2 பாகங்களாக மணிரத்னம் எடுத்து உள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இது மிக பெரும் பான் இந்தியா படமாக இருக்கின்றது. 5 மொழிகளில் வெளியாகி உள்ளது.
செப்டம்பர் 30ந் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களாகி உள்ள நிலையில், 230 கோடி தாண்டி உள்ளது. பிளாக்பஸ்டரை நோக்கி சென்று கொண்டிருக்கும் இப்படம் இன்று ரூ 250 கோடி வசூலை எட்டிவிடும். தொடர்ந்து தசரா விடுமுறை தினம் என்பதால் மிக பெரும் வெற்றி அடைந்து வசூலிலும் பல சாதனைகளை படைக்க உள்ளது.