‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியானது

0
9

அமேசான் பிரைம்:  பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவந்து ஒரு மாதம் நிறைவடைய உள்ள நிலையில் தற்போதும் திரையரங்குகளில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி ஒரு மாதம் ஆன நிலையில் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஹெச்டி தரத்தில் வெளியாகியுள்ளது. இருப்பினும் அதைக் காண்பதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. படம் ஓடிடி தளத்தில் வெளியானாலும் தற்போது சந்தாதாரர்கள் அனைவரும் படத்தை காண முடியாது. அமேசான் பிரைம் ஓடிடியில் சந்தாதாரர் உட்பட அனைவரும் ரூ.199 கட்டணம் செலுத்திதான் பார்க்க முடியும்.

ponniyin selvan now streaming in am

ரூ.199 செலுத்திய தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் படத்தைப் பார்த்து விட வேண்டும். மேலும் படத்தை பார்க்க ஆரம்பித்த 48 மணி நேரத்துக்குள் படத்தை பார்த்து முடித்துவிட வேண்டும். படத்தை பதிவிறக்கம் செய்ய முடியாது. மேலும் அடுத்த 7 நாட்களில் அமேசான் பிரைம் ஓடிடியில் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் நவம்பர் 4ம் தேதி முதல் படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. அப்போது அமேசான் பிரைம் சந்தாதாரர்கள் கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்தாமல் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை பார்க்க முடியும். மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here