பொன்னியின் செல்வன்: இன்று ஹாங்காங்கில் ஆசிய திரைப்பட விருது விழா நடைபெற உள்ளதை அடுத்து இந்த விழாவில் பங்கேற்க ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு ஹாங்காங் சென்றுள்ளனர். 16வது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் 6 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. லைகா ஜிகே தமிழ்க்குமரன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் சார்பாக நிர்வாக தயாரி்ப்பாளர் சிவா ஆனந்த் ஆகியோர்களுடன் எடிட்டர் ஸ்ரீதர் பிரசாத் மற்றும் ரவிவர்மன் உள்ளிட்டோர் ஹாங்காங் பயணம் செய்துள்ளனர். இந்த விருது வழங்கும் விழாவில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ஆறு விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு.
சிறந்த திரைப்படம் – பொன்னியின் செல்வன் பாகம்-1.
சிறந்த இசையமைப்பாளர் – ஏ.ஆர்.ரஹ்மான்
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் – தாேட்டா தரணி
சிறந்த எடிட்டிங் – ஸ்ரீகர் பிரசாத்
சிறந்த ஒளிப்பதிவு – ரவி வர்மன்.
சிறந்த ஆடை வடிவமைப்பு – ஏகா லக்கானி.
இந்த 6 பிரிவுகளில் பொன்னியின் செல்வன் படம் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளை பெறுவதற்காக படக்குழு ஹாங்காங் விரைந்துள்ளது.