தமிழ் சினிமாவில் வசூல் வேட்டை நடத்திய டாப் 5 படங்களில் ‘பொன்னியின் செல்வன்’ முதல் இடத்தை பிடித்துள்ளது

0
5

டாப் 5 படங்கள்:  படம் நன்றாக இருந்தாலும் சில சமயங்களில் படத்தின் வெற்றி, தோல்வி அதன் வசூலை பொறுத்து நிர்ணியிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ் படங்களில் சில தமிழ்நாட்டையும் தாண்டி உலக அளவில் வசூல் வேட்டை நடத்தியுள்ளன. இருப்பினும் தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் செய்த வசூல் சாதனையை வைத்து டாப் 5 படங்களை காணலாம்.

1.பொன்னியின் செல்வன்

கடந்த செப்டம்பர் 30ம் தேதி மணிரத்னம் இயக்கி விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படம் தமிழ்நாட்டில் வெளியாகி தமிழில் அதிக வசூல் சாதனை படைத்த திரைப்படங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இப்படம் வெளியாகி 13 நாட்களிலேயே 186 கோடி ரூபாய் வசூல் ஈட்டி இந்த சாதனையை படைத்துள்ளது. அதே நேரத்தில் உலக அளவில் 424 கோடி ரூபாய் வசூல் செய்து, அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் 3வது இடத்தை பிடித்துள்ளது.

2.விக்ரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா உள்ளிட்டோர் நடித்து கடந்த ஜீன் மாதம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘விக்ரம்’ திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 183 கோடி ரூபாய் வசூல் செய்து தமிழக வசூலில் 2 வது இடத்தை பிடித்துள்ளது. உலக அளவில் 446 கோடி வசூல் செய்து 2வது இடத்தில் உள்ளது.

3.மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’. இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 142 கோடி வசூல் செய்து 3 வது இடத்தை பிடித்துள்ளது. உலக அளவில் 300 கோடி ரூபாய் வசூல் செய்து அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் 5 வது இடத்தை பிடித்துள்ளது.

4.பிகில்

அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து கடந்த 2019 ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘பிகில்’. இப்படம் தமிழகத்தில் மட்டும் 140.80 கோடி வசூல் செய்து 4ம் இடத்தில் உள்ளது. உலக அளவில் 298.7 கோடி வசூல் செய்து 6 வது இடத்தில் உள்ளது.

5.சர்கார்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து 2018ல் வெளியான திரைப்படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் தமிழகத்தில் 131 கோடி வசூல் செய்து 5 வது இடத்தில் உள்ளது. உலக அளவில் 263 கோடி ரூபாய் வசூலித்து அதிக அளவு வசூல் செய்த தமிழ்படங்களில் 9வது இடத்தை பிடித்துள்ளது.

மேலும் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 திரைப்படம்தான் உலக அளவில் 800 கோடி வசூலித்து அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் முதல் இடத்தில் உள்ளது. top 5 tamil movies in box office collection

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here