மொபைல் பயன்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த போப் பிரான்சிஸ். ஆபாசப் படம் பார்க்கும் தீமையான பழக்கம் பலருக்கு உள்ளது. இதை பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும் கூட பார்ப்பது வேதனை அளிக்கிறது. மேலும், ஆபாச படங்கள் பார்ப்பது ஆன்மாவை பலவீனப்படுத்துவதுடன் பிசாசுக்கும் இடமளிக்கும் என்றார்.
உலகமெங்கும் மொபைல் போன் மக்களிடம் பரவி கிடக்கின்றது. பல நல்ல விஷயங்களுக்கும் பயன்படுகின்றது. பல தீய விஷயங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதை யார் பயன் படுத்துகிறார் எந்த விஷயத்திற்காக பயன்படுத்துகிறார் என்பதே மிக முக்கியமாகும்.
இன்று கையடக்க போன் மூலம் உலகத்தை அறிய முடியும் அந்த அளவிற்கு டிஜிட்டல் உலகத்தில் இருக்கின்றோம். கால மாற்றத்திற்கேற்ப வளர்ச்சி மிக முக்கியம் என்பதில் அணு அளவும் சந்தேகம் இல்லை. ஆனால், தீய விஷயத்திற்கும் உறுதுணையாக மொபைல் போன் பயன்படுத்தப்படுவது வறுத்தம் அளிப்பதாக உள்ளது.
இதையும் படியுங்கள்: செம்பி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கண் கலங்கிய CWC அஸ்வின்

எந்த ஓரு செயலிலும் ஓரு நன்மையும் ஓரு தீமையும் இருப்பது இயற்கையே ஆனால், பயன்படுத்தும் நபரின் மூலம் வேறுப்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. காலக் கொடுமையாக மக்களின் தூதர்களாக அமைக்கப்படும் அமைச்சர் பெருமக்கள் கூட சட்டமன்ற நிகழ்வின் போது இது போன்ற ஆபாசப் படம் பார்ப்பது துயரத்திலும் துயரமாக காணப்படும் அவலம் இன்றும் உள்ளது.
இந்த நிலையில், வாட்டிகன் நகரில் போப் பிரான்சிஸ் உடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் டிஜிட்டல் மற்றும் சமுக வலைத்தளத்தை எப்படி நல்ல விதத்தில் உபயோகிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், இணையத்தில் வரும் ஆபாசப்படங்கள் தீமையை விளைவிக்கிறது. மேலும் அதன் மூலம் ஏற்படும் அபாயத்தைப் பற்றி எச்சரித்துள்ளார்.
அதற்கு கன்னியாஸ்திரீகள், போதர்கள் போன்றவர்கள் கூட தப்பிக்க முடிய வில்லை. சாத்தான் அதிலிருந்து வருகிறது. மனத்திற்குள்ளே செல்கிறது. போதகர்களின் இதயத்தை நலினப்படுத்துக்கிறது என்று கூறினார். கடந்த வருடங்களாக போப் பிரான்சிஸ் தொடர்ந்து ஆபாசப்படங்களினால் ஏற்படும் தீமையைப் பற்றிப் பேசிக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, டிஜிட்டல் மற்றும் சமூக வலைத்தளங்களை நல்ல முறையில் உபயோகிக்க வேண்டும், அதில் அதிக நேரம் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறினார். மேலும் தூண்டுதல்கள் ஏற்படுத்தாத வகையில் ஆபாசப்படங்களை போனில் இருந்து நீக்கி விடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.