சூர்யா-பிரபாஸ்: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார்கள். இந்த படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பு நடைபெற்று வரும் தளத்துக்கு அருகிலேயே பிரபாஸ், தீபிகா படுகோன் நடிக்கும் படத்தின் ஷீட்டிங்கும் நடந்து வந்தது. அப்போது படப்பிடிப்புக்கு இடையே பிரபாஸ், சூர்யாவை சந்தித்து பேசினார். இருவரும் நீண்ட கால நண்பர்கள். இந்த சந்திப்பின் போது ஸ்டுடியோவுக்கு அருகில் உள்ள ரெஸ்டாரன்டுக்கு டின்னருக்கு வரும்படி சூர்யாவை பிரபாஸ் அழைத்தார். சூர்யாவும் அவரது அழைப்பை ஏற்றுக் கொண்டார். ஆனால் மாலை 6 மணிக்கு தொடங்க வேண்டிய படப்பிடிப்பு தாமதமானதால் ஷீட்டிங் முடிய இரவு 11.30 மணியானது. ஷூட்டிங் பிசியில் சூர்யா பிரபாஸின் டின்னர் விருந்தை மறந்து விட்டார்.
பின்னர் சூர்யா போன் செய்து ஸாரி கேட்க நினைத்த போது ‘ஒன்றும் பிரச்சினை இல்லை. உங்களுக்காக காத்திருக்கிறேன். நம்ம வேலையே அப்படித்தானே. நீங்கள் நிதானமாக வாருங்கள்’ என்று பிரபாஸ் கூறியதும் சூர்யா நெகிழ்ந்து போனார். உடனே அவர் ரெஸ்டாரன்ட்டுக்கு போனார். அப்போது நள்ளிரவு 12 மணி. அவர் அங்குள்ள உணவைத்தான் ஆர்டர் செய்வார் என்று சூர்யா நினைத்த போது, பிரபாஸ் தனது அம்மா சமைத்த சுவையான பிரயாணியை கொண்டு வந்து சூர்யாவுக்கு பரிமாறினார். இது சூர்யாவுக்கு மேலும் சர்ப்ரைஸாக இருந்தது. இது பற்றி சூர்யா கூறும்போது ‘பிரபாஸின் அம்மா சமைத்த பிரியாணி அதிக சுவையுடன் இருந்தது. காரணம், அதில் அம்மாவின் அன்பும், பிரபாஸின் அக்கறையும் கலந்திருந்தது’ என்றார்.