பிரதீப்: ‘கோமாளி’ படத்தை ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் பிரதீ்ப் ரங்கநாதன் இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதன் கதை வித்தியாசமாக இந்த கால இளைஞர்களை கவரும் விதமாக இருந்தது. அவர் இயக்கிய முதல் படமே அவருக்கு நற்பெயரை பெற்று தந்தது. அதன் பிறகு அவர் ‘லவ் டுடே’ படத்தை இயக்கினார். இதில் பிரதீப்பே ஹீரோவாகவும் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். மேலும் இதில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு உள்ளிட்டோரும் சிறப்பாக நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இதன் பாடல்களும், கதையும் 2கே கிட்ஸை வெகுவாக கவர்ந்தது. குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் மாபெரும் வசூல் ஈட்டி மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு அங்கும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் அவரது அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் அடுத்ததாகவும் அவர் ஏஜிஎஸ் பட நிறுவனத்துக்காக படம் இயக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த படத்திலும் பிரதீப் ஹீரோவாக நடித்து இயக்க உள்ளார். இப்படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படம் இன்ஜினியரிங் மாணவர்கள் வாழ்க்கையில் நடக்கும் கதையாக உருவாகிறது. இன்ஜினியரிங் மாணவராக பிரதீப் நடிக்க இருக்கிறார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.