பிரதோஷ வழிபாட்டு முறைகளும் விளக்கங்களும்

0
45

பிரதோஷ வழிபாடு என்பது இந்து சமய சிவன் கோவில்களில் நிகழும் வழிபட்டு முறைகளில் ஓன்றாகும். சிவ பெருமானை நினைத்து சிவ ஆலயம் சென்று ‘ஓம் நமசிவாய ஓம் நமசிவாய’ என்ற மந்திரத்தை ஓதி மனதார வழிபட்டால் துன்பங்கள் நீங்கி இன்பம் நிறைந்து வாழ்வில் நிம்மதி அடையலாம் என்பது நம்பிக்கை.

தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி” என்று, அவ‍ரவருக்குத் தெரிந்த சிவ பெருமானின் மந்திரத்தை வாசித்து மகிழ்வார்கள் பக்தர்கள்.

பிரதோஷ வழிபாடு என்றால் என்ன?

பிரதோஷம் என்பது அனைத்து வித தோஷங்களையும் விரட்டி அடிக்கக் கூடியது. பிரதோஷ நாளன்று சிவ பெருமானையும் ரிஷப வாகனமான நந்தி பகவானையும்  விரதம் இருந்து வழிபட்டால் எல்லா தோஷங்களும் நீ்ங்கி நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மாதந்தோறும் இருமுறை வளர்பிறை, தேய்பிறை திரியோதசி 13- ம் நாள் பிரதோஷ நாளாக வணங்கப்பட்டு வருகிறது.

பிரதோஷ வழிபாட்டு முறைகளும் விளக்கங்களும்

பிரதோஷ வழிபாட்டின் முறைகள்

பிரதோஷ நாளன்று காலையில் எழந்து சுத்தமாக தலைக்கு குளித்து விட்டு காலை முதல் எவ்வித உணவினையும் உண்ணாமல் விரதம் இருந்து மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு உணவினை எடுத்துக் கொள்ளவார்கள். இடையில் தேவை ஏற்படின் தண்ணீர் மற்றும் பழச்சாறுகளை குடிக்கலாம். மாலை சிவ ஆலயம் சென்று சிவ பெருமானுக்கும் நந்தி பகவானுக்கும்  நடைபெறும் அபிஷக ஆராதனைகளை கண்டு உள்ளம் உருகி தனக்கு தெரிந்த சிவ பெருமான் பாடல்களைப் பாடி வணங்கி விட்டு வீட்டிற்கு வந்து விரதத்தினை முடித்து விடலாம்.

பிரதோஷ வழிபாட்டின் நேரம்

பிரதோஷ நாளான அன்று மாலைசூரியன் மறைவதற்கு முன்னால் மூன்றே முக்கால் நாழிகையும், சூரியன் மறைந்ததற்கு அப்பால் மூன்றே முக்கால் நாழிகையும் ஆக ஏழரைக் காலம் தான் பிரதோஷ காலமாகும். அதாவது மாலை 4.30 முதல் சூரியன் மறையும் நேரமான 7.00 மணிக்குள் வழிபாடு நிகழ்வது வழக்கமாகும்.

பிரதோஷ வழிபாட்டின் அபிஷேகங்கள்

அனைத்து சிவ ஆலயங்களிலும் சிவ பெருமானுக்கும் நந்தி பகவானுக்கும் பால், தயிர், சந்தனம், திருநீறு, மஞ்சள், திருமஞ்சனப் பொடி, இளநீர், பன்னீர் இப்படி பல வகையான திரவியங்களையும் கொண்டு அபிஷேகம் செய்து புதிய அங்கவஸ்த்திரம் எனப்படும் பட்டு வேட்டி, பட்டுத் துண்டு சாற்றி, சம்பங்கி, அரளி, பன்னீர் ரோஜா, மல்லிகை, தாமரை, சிவ லிங்கப் பூ மேலும் என்னற்றப் பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்தும் வில்வ இலை, அருகம் புல்,மலர் மாலைகளால் அலங்கரித்து தீப ஆராதனை செய்து விமர்சையாக வணங்குவார்கள்.

இதன் ஓரு பகுதியாக சிவ பெருமானை தோளில் தூக்கிக் கொண்டு மேல தாலமுடன் ஆடிப்பாடி கோவிலை வலம் வருவார்கள். ”நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதில் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க” என நமச்சிவாய பதிகம் பாடி வணங்குவார்கள் அடியவர்கள்.

தேவேந்திரன் சாபம் பெறுதல்

தேவேந்திரன் தன் வாகனமாகிய ஐராவத்தில் (வெள்ளை யானை) மீது ஏறி வலம் வந்து கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த துர்வாச முனிவர் தேவேந்திரனை பார்த்து அவனை  வாழ்த்தி பூக்களைக் கொடுத்தார். தேவேந்திரனோ அதனை அலட்சியமாக யானையின் தலை மீது வைத்தார் யானையோ அதனை கீழே தள்ளி காலில் போட்டு மிதித்தது.

அதனை கண்ட துர்வாச முனிவர் மிகுந்த கோபமுடன், தேவேந்திரா! அவ்வளவு ஆணவமா? என்று வினவினார்.” நாங்கள் செல்வத்தின் மீது பற்றில்லாதவர்கள் அம்பிகையின் அருட்கடாக்ஷம் மிக்கவர்கள். அந்த லட்சுமி தேவியின் பரிபூரண அருள் இன்னும் உனக்கு கிடைக்கட்டும் என்ற என்னத்தில் தேவியின் பிரசாத்தை அளித்தேன்.

நீயோ அதனை உன் செல்வ செருக்கின் மிகுதியினால் அதனை அலட்சியம் செய்து விட்டாய். உன் ஆணவத்துக்கு காரணமான அந்த செல்வம் முழுவதையும் நீ இழக்க கடவாய்! என்று சாபமிட்டார்.” உத்தமரின் சாபம் உடனே பலித்தது. தேவேந்திரனது அனைத்து செல்வங்களும் மறைந்தன.

பார்கடலைக் கடைதல்

தேவேந்திரன் இழந்த அனைத்து செல்வங்களையும் மீட்க பார்கடலைக் கடைய வேண்டும் என்ற நிலை வந்தது. திருப்பாற்கடலில் எல்லா விதமான மூலிகைகளையும் போட்டார்கள். மந்தர மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பைக் கயிறாகச் சுற்றி, பாற்கடலைக் கடையத் தொடங்கினார்கள். வாசுகியின் தலைப்பக்கத்தை அசுரர்களும், வால் பக்கத்தை தேவர்களும் பிடித்துக் கொண்டனர்.

படம்: விருத்தாசலம் விருத்தகிரீஷ்வரா் மேற்கு வாசல் கோபுரம்

பாற்கடல் கடையப்பட்டது மகத்தான மந்தர மலை கடலில் மூழ்கத் தொடங்கியது. மாகாவிஷ்ணு உடனே கூர்ம அவதாரம் எடுத்து மந்தர மலை மூழ்காதவாறு தாங்கினார். பாற்கடலை கடைய கடைய மிகவும் ஆபத்தான அலகால விஷம் தோன்றியது. உடனே அனைவரும் கைலாயம் சென்று சிவ பெருமானிடம் முறையிட்டு விழுந்து வணங்கி எங்களை காப்பாற்றுமாறு வேண்டினர்.

அருகில் இருந்து ஈசனின் மறுவுருவான சுந்தரரை அழைத்து அவ்விஷத்தை கொண்டு வா! என்றார். அடுத்தகனமே விஷத்தை கொண்டுவந்ததால் அவர் ஆலகால சுந்தரா் எனப்பட்டார். சிவபெருமான் அக்கொடிய விஷத்தை தானே விழுங்கினார். உடனே அருகில் இருந்த அனைவரும் பயந்து அஞ்சினர். அவரது உடலில் உலக உயிர்கள் அனைத்தும் குடியிருப்பதால் தேவர்கள், முனிவர்கள், கைலாயத்தில் உள்ள அனைவரும் வருத்தமுற்று இருந்தனர்.

ஈசனுக்கு பாதியாக விளங்கும் பார்வதி தேவி அவரது தொண்டைப் பகுதியை இறுக்கமாக பிடித்தார். அவ்விஷம் உடலில் செல்லாமல் காத்தார் ஈசனின் கண்டப்பகுதியானது நீலமாக மாறியது. ஆதலால் அவருக்கு திருநீலகண்டன் என்ற பெயரும் தோன்றியது.

பிரதோஷம் வரலாறு

தேவர்கள், முனிவர்கள், அரக்கர்கள் என அனைத்து உயிர்களையும் காத்ததால் அவரை அனைவரும் வணங்கினர். சிவபெருமான் ரிஷப வாகனத்தின் மீது ஏறியும், ரிஷபத்தின் இரு கொம்புகளுக்கு மத்தியிலும் ஆனந்த தாண்டவம் புரிந்தார்.

மற்ற தெய்வங்களும் மகா முனிவர்களும் உட்பட அனைவரும் மகாதேவனின் அந்த ஆனந்தத் தாண்டவத்தை தரிசித்தார்கள். இவ்வாறு சிவபெருமான் அருள் புரிந்த காலமே ‘பிரதோஷ காலமாக’  உலக மக்களால் வணங்கப்பட்டு வருகிறது.

பிரதோஷ நேரங்களில் கோவிலை வலம் முறை

பிரதோஷ காலங்களில் கோவிலை வலம் முறையை சோமசூக்த பிரதக்ஷணம் என்பர். அப்படி என்றால் என்ன? எப்படி வலம் வர வேண்டும் என கேள்வி எழும் அதற்கான விளக்கத்தை தருகிறேன் கேளுங்கள்.

முதலில் நந்தியம் பகவானை வணங்கி பின் இரு கொம்புகளுக்கு இடையே சிவபெருமானை வணங்கி அப்பிரதட்சணமாக (எதிர் வலமாக) சண்டிகேஸ்வரா் சன்னதி சென்று வணங்கி திரும்பவும் பிரதட்சணமாக ஆலயத்தை வலம் வந்து ஈசனின் அபிஷேக தீர்த்தம் வரும் கோமுகத்தை கடக்காமல் திரும்பி அப்பிரதட்சணமாக சிவபெருமான் சன்னதியில் ஈசனையும் நந்தியையும் வணங்க வேண்டும். இம்முறையில் வலம் வருவதை பிரதோஷ தினத்தில் மட்டுமே செய்ய வேண்டும்.

ஆலகால விஷம் வெளிப்பட்டபோது, தேவர்களும் அசுரா்களும்  பயத்துடன் அனைவரும் கயிலையை நோக்கி ஓடினர். அப்போது விஷம் அப்பிரதட்சிணமாக அவர்களுக்கு எதிராக வந்து விரட்டியது. எனவே, அவர்கள் வந்த வழியே திரும்பி ஓடினர். அங்கும் அவர்களுக்கு எதிராக விஷம் வந்து துன்புறுத்தியது. இப்படி இடவலமாக அவர்கள் வலம் வந்த முறைதான் ‘சோமசூக்தப் பிரதட்சணம்’ எனப்படுகிறது.

இப்படி பிரதோஷ தினத்தில் நாமும் இடம் வலமாக வலம் வருவதால் தோஷங்கள் நீங்கி நீண்ட ஆயுள், செல்வச் செழிப்பு, வாழ்வில் மேண்மை, மன மகிழ்ச்சி என ஈசன் அனைத்தையும் வழங்குவான் என்பது பக்தர்களின் நீண்ட கால நம்பிக்கை.

காப்பரிசி நெய்வேதியம்

‘சிலாதா முனிவர்’ என்பவர் தனக்கு குழந்தை பாக்கியம் வேண்டி கடும் தவமிருந்தார். அவரின் தவத்தில் குளிர்ந்த ஈசன் அவரின் முன்னர் தோன்றி சிலாதா என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். முனிவர் சிவபெருமானே நீயே எனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என்றார்.

படம்: ராசிபுரம் கைலாசநாதர் திருக்கோயில் பிரதோஷ நந்தி

என் அம்சத்தில் பிள்ளை பிறக்கும் என்று கூறி மறைந்தார். சிலாதாரின் விருப்பப்படி ஆண் குழந்தை பிறந்தது. அவரே நந்தி பகவான். சிவபெருமானை நோக்கி தவம் செய்ததால் வாயிற் காவல் தொழிலில் கைலாயத்தில் சிவனிடம் இருக்கும் பேறு பெற்றார். சிவ கணங்களில் சிலவற்றிற்கு தலைவராகவும் சிவபெருமானால் நியமிக்கப்பட்டார்.

அசுரா்களும் தேவகணங்களும் ஆலகால விஷம் வெளிப்பட்டவுடன் கைலாயம் வந்து நந்தியிடம் அனுமதி வாங்கி ஈசனை கண்டு முறையிட்டார்கள். அப்போது நந்தி மட்டும் அவ்விஷத்திற்காகவா இப்படி பயப்படுகீறீர்கள் என அனைவரையும் ஏலனம் செய்து சிரித்தது.

உடனே சிவபெருமான் நந்தியை அழைத்து ஆலகால விஷத்தை எடுத்து உண்ட என் கையை முகர்ந்து பார்! என்றார். நந்தி பகவான் முகர்ந்தார். அதே விநாடியில் சுயநினைவை இழந்தார். கீழே விழுந்தார், எழுந்தார், அழுதார், சிரித்தார், பித்துப் பிடித்தவர் போலப் பலவிதமான சேட்டைகளைச் செய்து சுற்றித் திரிந்தார்.

உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் தாயான உமாதேவி அதைக் கண்டு வருந்தினாள். ”இறைவா! நந்திக்கு இப்படிப்பட்ட தண்டனை தரலாமா? போதும்… மன்னித்து விடுங்கள்!” என வேண்டினாள்.

உமாதேவி! ஆணவத்துடன் பேசியதால் அவனை அடக்கவே அவ்வாறு செய்தோம். விஷத்தின் வாசனையை முகர்ந்ததற்கே இந்தப் பாடுபடுகிறான் என்றால், அதை உண்டால் என்ன பாடுபட்டிருப்பான்? அதை அவனுக்குக் காட்டவே இவ்வாறு செய்தோம். அரிசியைப் பொடி செய்து வெல்லத்துடன் சேர்த்துக் கொடு. அவன் தெளிவு பெற்றுப் பழைய நிலையை அடைவான்!” என்றார் சிவபெருமான்.

அவரது சொற்படியே செய்தாள் அம்பிகை. அதை உண்ட நந்தி பழையபடி சுயநிலையை அடைந்தார். அன்று முதல் பிரதோஷ நாளன்று, நந்திக்குக் காப்பரிசி நைவேத்தியம் செய்யப்படுவது சிறப்புக்குரியது.

மஹா பிரதோஷம்

11-ஆம் பிறையாகிய ஏகாதசியில் அவர் விஷம் உண்டார். 12-ஆம் பிறையாகிய துவாதசியில் காட்சி தந்தார். 13ம் பிறையாகிய திரயோதசி மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் தந்தார். சிவபெருமான் விஷம் உண்ட நாள் சனிக்கிழமையாகும். எனவே, சனி பிரதோஷம் மகத்தான சிறப்பு வாய்ந்தது. பிரதோஷங்களில் சிறப்பு வாய்ந்தது சனி பிரதோஷம் இதனை மஹா சனி பிரதோஷம் என்பர்.

சனி பிரதோஷத்தை முறையாக வழிபட நாம் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப ஏழரைச்சனி, அர்த்தாஷ்டம சனி, கண்ட சனி, அஷ்டமச்சனி காலக்கட்டத்தில் பலன் கொடுத்துக் கொண்டிருக்கும் சனீஸ்வர பகவானின் கோபம் தணிந்து துன்பத்தைப் போக்க கண்டிப்பாக சனி பிரதோஷ வழிபாட்டை கடைப்பிடிக்க வேண்டும்.

ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும். பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், வறுமை விலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

சனி பிரதோஷத்தின் நன்மைகள்

 • இன்று ஈஸ்வரனையும், சனீஸ்வரனையும் விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு உண்டு.
 • சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று . “ஓம் ஆம் ஹவும் சவும்” என்ற மந்திரத்தை ஒரு சிவாலயத்தில் ஒரு முறை ஜபிப்பதால், நாம் நமது முந்தைய ஏழு பிறவிகள் நமது முன்னோர்கள் ஏழு தலை முறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் அவற்றால் ஏற்பட்ட பாவங்கள் அழிந்துவிடும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.
 • இந்த மந்திரத்தை, குறைந்தது ஒன்பது தடவையும், அதிகபட்சமாக 108 முறையும் ஜபித்து வந்தால் தகுந்த பலன் கிடைக்கும்.
 • ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால் ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என அனுபவம் மிக்க சிவனடியார்கள் தெரிவிக்கின்றனர்.
 • ஈஸ்வரனையும், சனீஸ்வரனையும் விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு உண்டு.
 •  பிரதோஷ விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவன் அருள் கிடைக்கும்.
 • சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான்.
 • பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் மறுமையிலும் பலன்கள் கிடைக்கும்.
 • பிரதோஷ கால விரதம் ஆவணி, கார்த்திகை ஆகிய மாதங்களில் தொடங்குவது சிறந்தது.
 • பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.

பிரதோஷ நாளன்று கூறும் மந்திரம்

ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்ட்டாய சம்பவே
அம்ருதேஸாய சர்வாய மஹாதேவாய தே நமஹ

பிரதோஷ வகைகள்

1.தினசரி பிரதோஷம்

2.பட்சப் பிரதோஷம்

3. மாசப் பிரதோஷம்

4. நட்சத்திரப் பிரதோஷம்

5. பூரண பிரதோஷம்

6. திவ்யப் பிரதோஷம்

7.தீபப் பிரதோஷம்

8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்

9. மகா பிரதோஷம்

10. உத்தம மகா பிரதோஷம்

11. ஏகாட்சர பிரதோஷம்

12. அர்த்தநாரி பிரதோஷம்

13. திரிகரண பிரதோஷம்

14. பிரம்மப் பிரதோஷம்

15. அட்சரப் பிரதோஷம்

16. கந்தப் பிரதோஷம்

17. சட்ஜ பிரபா பிரதோஷம்

18. அஷ்ட திக் பிரதோஷம்

19. நவக்கிரகப் பிரதோஷம்

20. துத்தப் பிரதோஷம்

திங்கட்கிழமைகளில் வருகின்ற பிரதோஷம் சோமவாரப் பிரதோஷம் எனவும், சனிக்கிழமைகளில் வருகின்ற பிரதோஷம் சனிப்பிரதோஷம் என்றும் அழைக்கப்படுகிறது.

அபிஷேகப் பொருட்களும் பலன்களும்

 • மலர்கள் – தெய்வ தரிசனம் கிட்டும்
 • பழங்கள் – விளைச்சல் பெருகும்
 • சந்தனம் – சிறப்பான சக்திகள் பெறலாம்
 • சர்க்கரை – எதிர்ப்புகள் மறையும்
 • தேன் – இனிய சாரீரம் கிட்டும்
 • பஞ்சாமிர்தம் – செல்வம் பெருகும்
 • எண்ணெய் – சுகவாழ்வு
 • இளநீர் – நல்ல மக்கட் பேறு கிட்டும்
 • பால் – நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
 • தயிர் – பல வளமும் உண்டாகும்
 • நெய் – முக்தி பேறு கிட்டும்

நலம் தரும் நந்தி பகவானின் துதி

சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி, சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி, கவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி. கைலை யிலே நடம்புரியும் கனிந்த நந்தி..

பள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்தி பார்வதியின் சொல்கேட்டுச் சிரிக்கும் நந்தி நல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி நாள்தோறும் தண்ணீரில் குளி க்கும் நந்தி

செங்கரும்பு உணவு மாலை அணியும் நந்தி சிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்தி மங்களங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்தி மனிதர்களின் துயர் போக்க வந்த நந்தி

அருகம்புல் மாலையையும் அணியும் நந்தி அரியதொரு வில்வமே ஏற்ற நந்தி வரும் காலம் நலமாக வைக்கும் நந்தி வணங்குகிறோம் எமைக்காக்க வருக நந்தி

பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி பேரருளை மாந்தருக்கு வழங்கும் நந்தி வரலாறு படைத்து வரும் வல்ல நந்தி வறுமையினைஎந்நாளும் அகற்றும் நந்தி

கெட்டகனா அத்தனையும் மாற்றும் நந்தி கீர்த்தியுடன் குலம் காக்கும் இனிய நந்தி வெற்றிவரும் வாய்ப்பளிக்க உதவும் நந்தி விதியினைத்தான் மாற்றிட விளையும் நந்தி

வேந்தன் நகர் செய்யினிலே குளிக்கும் நந்தி வியக்க வைக்கும் தஞ்சாவூர்ப் பெரிய நந்தி சேர்ந்த திருப்புன்கூரிலே சாய்ந்த நந்தி செவி சாய்த்து அருள் கொடு க்கும் செல்வ நந்தி

கும்பிட்ட பக்தர் துயர் நீக்கும் நந்தி குடம் குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி பொன் பொருளை வழங்கிடவே வந்த நந்தி புகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி

நாட்டமுள்ள நந்தி

நந்தியிது நந்தியிது நா ட்டமுள்ள நந்தியிது நந் தனுக்கு நலம்புரிந்த நலமான நந்தியிது செந்தூரப் பொட்டுவைத்து சிலிர்த்துவரும் நந்தியிது சிந்தையில் நினைப்பவ ர்க்குச் செல் வம்தரும் நந்தி யிது (நந்தி)

தில்லையில் நடனமாடும் திவயநாதன் நந்தியிது எல்லையில்லா இன்பம்தரும் எம்பெருமான் நந்தியிது ஒற்றை மாடோட்டியெனும் உலகநாதன் நந்தியிது வெற்றிமேல் வெற்றிதரும் வேந்தன்நகர் நந்தியிது

பச்சைக்கிளி பார்வதியாள் பவனிவரும் நந்தியிது பார்ப்பவர்க்குப்பலன் கொடுக்கும் பட்சமுள்ள நந்தியிது சங்கம் முழங்குவரும் சங்கர னின் நந்தியிது எங்கும் புகழ்மணக்கும் எழி லான நந்தியிது (நந்தி)

கொற்றவன் வளர்த்துவந்த கொடும்பாளுர் நந்தியிதுநற்றவர் பாக்கியத்தால் நமக்குவந்த நந்தியிது நெய்யிலே குளித்து வரு ம் நேர்மையுள்ள நந்தியிது ஈஎறும்பு அணுகாமல் இறைவ ன்வ ரும் நந்தியிது (நந்தி)

வானவரும் தானவரும் வணங்குகின்ற நந்தியிது காணவரும் அடியவர்க்கும் கருணைகாட்டும் நந்தியிது உலகத்தார் போற்றுகின்ற உத்தமனின் நந்தியிது நக ரத்தை வளர்த்துவரும் நா ன் மறையின் நந்தியிது (நந்தி)

நந்திதேவர் வணக்கம்

(ஆடுக ஊஞ்சல் ஆடுகவே என் ற மெட்டு)

வழிவிடு நந்தி வழிவிடுவே வாழ்வில் நாங்கள் வளர்ந்துயர வழிவிடு நந்தி ! வழிவிடுவே வையகம் வளர வழிவிடுவே. (வழிவிடு)

எம்பிரான் சிவனைச் சுமப் பவனே எல்லா நலனும் தருபவனே ஏழைகள் வாழ்வில் இருளகல என்றும் அருளைச் சுரப்பவனே. (வழிவிடு)

நீரில் என்றும் குளிப்பவனே நெய்யில் என்றும் மகிழ்பவனே பொய்யில்லாத வாழ்வு தர பொங்கும் கருணை வாரிதியே. (வழிவிடு)

உந்தன் கொம்பு இரண்டிடையே உமையாள் பாகன் காட்சிதர தேவர் எல்லாம் அருள் பெற்றார் தேனாய் இனிக்கும் செய்தி அப்பா. (வழிவிடு)

தேடிய பலனைத் தந்திடுவாய் தேவர் போற்றும் நந்திதேவா ! வாழ்வில் வளமே வந்துயர வழியே காட்டி அமைந் திடுவாய். (வழிவிடு)

நந்தனார் போற்றும் நந்தி தேவா ! நாலுந் தெரிந்த வல்லவ னே எம்பி ரான் அருளை எமக்கருள என்றுந் துணையாய் நிற்பவனே. (வழிவிடு)

பிரதோஷம் என்றால் உன் மகிமை பெரிதும் வெளியில் தெரிந்திடுமே தேவர்க்குக் காட்சி உன்மூலம் தெரியச் செய்த பெரியவனே. (வழிவிடு)

நலம்தரும் நந்தி

பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி பேரருளை மாந்தர்க்கு வழங்கும் நந்தி வரலாறு படைத்து வரும் வல்ல நந்தி வறுமையினை எந்நாளும் அகற்றும் நந்தி.

கும்பிட்ட பக்தர்துயர் நீக்கும் நந்தி குடங்குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி பொன்பொருளை வழங்கிடவே வந்த நந்தி புகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி.

பிரதோஷ நந்தியின் 108 போற்றிகள்

ஓம் அன்பின் வடிவே போற்றி
ஓம் அறத்தின் உருவே போற்றி
ஓம் அகிலத்தைக் காப்பாய் போற்றி
ஓம் அரனுக்குக் காவலனே போற்றி
ஓம் அரியாய்வந்து அமர்ந்தவனே போற்றி
ஓம் அம்பலக் கூத்தனே போற்றி
ஓம் ஆலயத்தின் முன் இருப்பாய் போற்றி
ஓம் இருளை ஒழிப்பவனே போற்றி
ஓம் இடபமே போற்றி
ஓம் இடர்களைத் தடுப்பவனே போற்றி

ஓம் இகாபரசுகம் அளிப்பவனே போற்றி
ஓம் ஈகை உடையவனே போற்றி
ஓம் உலக ரட்சகனே போற்றி
ஓம் உபதேச காரணனே போற்றி
ஓம் ஊக்க முடையவனே போற்றி
ஓம் எருது உருவம் கொண்டவனே போற்றி
ஓம் எங்களுக்கு வரம் தருபவனே போற்றி
ஓம் ஏவல்களை ஒழித்தவனே போற்றி
ஓம் ஐயன் பால் அமர்ந்த வனே போற்றி
ஓம் ஒப்பில்லாதவனே போற்றி

ஓம் ஓங்கார வடிவானவனே போற்றி
ஓம் ஒளடதமாய் இருப்பவனே போற்றி
ஓம் கணநாயகனே போற்றி
ஓம் கஷ்டங்களைப் போக்குவாய் போற்றி
ஓம் கல்யாண மங்களமே போற்றி
ஓம் கலைகள் பலதெரிந்தோய் போற்றி
ஓம் கற்பகத் தருநிழல் அமர்ந்தாய் போற்றி
ஓம் கஸ்தூரி நிறம் ஒளி அணிந்தாய் போற்றி
ஓம் கவலைகளை ஒழிக்கும் வல்லவனே போற்றி
ஓம் காலனுக்கும் காவலனே போற்றி

ஓம் கிரிவல்லயன் துணையே போற்றி
ஓம் கீர்த்திகள் பல பெற்றாய் போற்றி
ஓம் குணநிதியே போற்றி
ஓம் குற்றம் களைவாய் போற்றி
ஓம் கூத்தனுக்கு மத்தளம் அடித்தாய் போற்றி
ஓம் கோலங்கள் பல செய்வாய் போற்றி
ஓம் கைலாச வாகனனே போற்றி
ஓம் கந்தனைக் கையால் அமர்த்தினாய் போற்றி
ஓம் காலமெல்லாம் ஈசன் சிந்தனையே போற்றி
ஓம் பஞ்சாக்ஷர ஜெபம் செய்பவனே போற்றி

ஓம் பஞ்சலிங்கத்தில் ஒருவன் ஆனாய் போற்றி
ஓம் பரமசிவன் தன்மை தெரிந்தோய் போற்றி
ஓம் பார்வதிக்கும் வாகனமாய் நின்றாய் போற்றி
ஓம் பிரதோஷ காலம் உடையவனே போற்றி
ஓம் பிறவிப் பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பிஞ்ஞகன் ஏவல் செய்வாய் போற்றி
ஓம் புகழ்கள் பல பெற்றோய் போற்றி
ஓம் பூத கணங்களுக்குத் தலைவனே போற்றி
ஓம் பூத பிசாசுகளை அடக்குவாய் போற்றி
ஓம் மகாதேவனே போற்றி

ஓம் மகிமை பல செய்வாய் போற்றி
ஓம் மஹேஸ்வரன் தூதனே போற்றி
ஓம் மங்கள நாயகனே போற்றி
ஓம் மதோன் மத்தம் தடுப்பாய் போற்றி
ஓம் மஞ்சள் மகிமை கொடுப்பாய் போற்றி
ஓம் மணங்கள் செய்காரணனே போற்றி
ஓம் மந்திர மகிமை உனக்கே போற்றி
ஓம் அகிலமெல்லாம் உன் அருள் போற்றி
ஓம் தட்சனுக்கு உபதேசம் செய்தாய் போற்றி
ஓம் தண்டங்களின் மேல் அமர்ந்தாய் போற்றி

ஓம் தன்மை களெல்லாம் அறிந்தோய் போற்றி
ஓம் தயாபரன் அருள் பெற்றவனே போற்றி
ஓம் தஞ்ச மென்றவர்க்கருள் செய்வாய் போற்றி
ஓம் நஞ்சுண்டவனை நாயகனாய் அடைந்தாய் போற்றி
ஓம் நாக நந்தனின் நயனம் தெறிந்தவனே போற்றி
ஓம் நாதமும் பிந்துவும் ஆனாய் போற்றி
ஓம் பழமும் சுவையும் நீயே போற்றி
ஓம் பண்புகள் பல செய்வாய் போற்றி
ஓம் பாரெல்லாம் உன்புகழ் போற்றி
ஓம் பிறவிப் பிணி அறுப்பாய் போற்றி

ஓம் அடியவர்க்கெல்லாம் அன்பே போற்றி
ஓம் ஆண்டவனிடம் அன்பு கொண்டாய் போற்றி
ஓம் ஆதாரசக்தி மயம் பெற்றாய் போற்றி
ஓம் சிவனின் வாகனம் ஆனாய் போற்றி
ஓம் இன்னல் தீர்க்கும் இறைவனே போற்றி
ஓம் நீண்ட கொம்புடையவனே போற்றி
ஓம் நீலாயதாட்சி அருள் பெற்றாய் போற்றி
ஓம் நீலகண்டன் முன் நின்றாய் போற்றி
ஓம் வேதங்களை காலாய் உடையவனே போற்றி
ஓம் வேள்விக்குத் தலைவனே போற்றி

ஓம் வித்யா காரணனே போற்றி
ஓம் விவேகம் எனக்குத் தருவாய் போற்றி
ஓம் விண்ணுலகம் செல்லும் வழியே போற்றி
ஓம் வில்வத்தின் மகிமையே போற்றி
ஓம் விஸ்வே உன் வல்லமையே போற்றி
ஓம் வேல்உடையவனே போற்றி
ஓம் மகா காளனே போற்றி
ஓம் மக்கள் பேறு தருவாய் போற்றி
ஓம் மாயைகளை அகற்றுவாய் போற்றி
ஓம் வெள்ளை நிறம் உடையாய் போற்றி

ஓம் உலகம் அறிந்த உத்தமனே போற்றி
ஓம் உன்மகிமை உலகமெல்லாம் போற்றி
ஓம் ஊஞ்சல் ஆட்டுபவனே போற்றி
ஓம் ஊடலுக்குதவியனே போற்றி
ஓம் உபதேசம் பெற்றவனே போற்றி
ஓம் உலகுக்கு அருள்வாய் போற்றி
ஓம் பிழைகள் பொறுப்பாய் போற்றி
ஓம் பிள்ளையார் சோதரனே போற்றி
ஓம் மாயை ஏடுக்கும் மாடாய் நின்றாய் போற்றி
ஓம் மாமன்னநம் உன்பனி செய்வார் போற்றி

ஓம் மகாதேவன் கருணையே போற்றி
ஓம் பரப்பிரம்மமே போற்றி
ஓம் விண்ணோர்க்கு அரிய மருந்தே போற்றி
ஓம் கண்டனின் வாகனமானாய் போற்றி
ஓம் சிவனின் பாதியை சுமந்தாய் போற்றி
ஓம் கையிலையின் காவலனே போற்றி
ஓம் மக்கள் குறைதீர்ப்பாய் போற்றி
ஓம் பிரதோஷ நாயகனே போற்றி போற்றி…

இவ்வாறு பிரதோஷத்தன்று சிவபெருமானையும் நந்தியம் பெருமானையும் வழிபட்டு சோமசூக்தப் பிரதட்சணம் மேற்கொண்டால் அனைத்து விதமான பலன்களையும் இறைவன் தருவான் என்பது அடியவர்களின் அசைக்க இயலா நம்பிக்கை.

தமிழ் சார்ந்த மற்றும் ஆன்மீகம் சார்ந்த செய்திகளுக்கு தலதமிழ் இணையத்தை நாடுங்கள். நன்றி…………

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here