பிரசாந்த் கிஷோர்: மக்களிடம் நேரடியாக செல்ல நேரம் வந்து விட்டதாக தேர்தல் வீயுக நிபுணரான பிரசாத் கிஷோர் தனது டிவிட்டர் கணக்கில் ட்விட் செய்துள்ளார். இதனை அடுத்து பீகாரில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தேர்தலில் 3 வது அணி என்றுமே வெற்றி பெற முடியாது என்றும் 2 வது அணியால் மட்டுமே பாஜாக அரசை வீழ்த்த முடியும் என்றும் கூறியிருந்தார். சமீபத்தில் காங்ரஸ் கட்சியில் இணைவதற்கு பிரசாந்த் கிஷோருக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் பெரும் எதிர்பார்ப்புக்கு பின் அவர் இணைய மறுத்து விட்டார். காங்ரஸ் கட்சியின் வட்டராங்கள் தெரிவிக்கிறது.

‘‛காங்கிரஸ் கட்சிக்கு என்னை விட தலைமையே தேவை. கட்சியின் வேரூன்றி இருக்கும் அமைப்பு ரீதியான பிரச்சினைகளை சீர்த்திருத்தம் மூலம் சரிசெய்ய கூட்டு தலைமை அவசியம். காங்கிரஸ் கட்சியில் சேரவும், தேர்தல்களுக்கு பொறுப்பேற்க கங்கிரஸ் விடுத்த கோரிக்கையை நான் ஏற்கவில்லை.” என குறிப்பிட்டு இருந்தார் பிரசாந்த் கிஷோர்.
கடந்த 2014ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியைப் பிடித்தது முதலே, காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாகத் தேர்தல்களில் தோல்விகளையே சந்தித்து வருகிறது. பல மாநிலங்களில் காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியை இழந்தது.
எனது ஆலோசனை, திட்டங்கள் என்பது பிரதமர் நரேந்திர மோடியை எப்படி தோற்கடிப்பது என்பது பற்றியது அல்ல. இந்தியாவை எப்படி வெல்வது என்பது தொடர்பானது. இரண்டுக்கும் இடையே நல்ல வேறுபாடு உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கிடையில் இன்று காலை தேர்த்ல் நிபுணரான பிராந்த் கிஷோர் தனது ட்விட்டர் கணக்கில் மக்களை நேரடியாக சந்திக்கும் நேரம் வந்து விட்டாதாக பதிவு செய்துள்ளார். 2024 ம் ஆண்டு இந்திய பாரத்தைத் ஆளும் நாயகர்கள் என ஆவலோடு காத்திருப்போம். யார் வந்தாலும் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் உரிய அருமையான ஆட்சியை நடத்தினால் போதும்.