Pregnancy Symptoms: கர்ப்பமாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!

0
13

Pregnancy Symptoms: கர்ப்பமாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்: திருமணம் என்பது வாழ்வின் மிக முக்கிய தருணமாக இருக்கிறதோ அதைவிட ஓருபடி மேலே மகிழ்ச்சிக்குரிய தருணம் என்றால் அது கரப்ப காலம் தான்.

ஓரு பெண் முழுமை பெறுவது என்றால் அது கர்ப்பம் தரித்து தன் குழந்தையை சுமக்கும் அந்த உன்னதமான தருணம் தான். திருமணம் முடிந்த பின் வரும் ஓவ்வொரு மாதமும் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் மாதங்களாகவே உணரப்படும். ஓவ்வொரு நாள் தள்ளி போகும் போதும் மனதில் புதிய உத்வேக உணர்வு மெய் சிலிர்க்க வைக்கும்.

கர்ப்பம் தரித்துள்ளதை நாம் அறியும் முன்பே நம் உடல் அறிந்துவிடும். அவர்களுக்கே தெரியாமல் உடல் குழந்தையைச் சுமப்பதற்குத் தயாராகிவிடும். ஆனால் சில நாட்கள் கழித்தே உடல் வெளிப்படுத்தும் சில அறிகுறிகளால் அதைக் கண்டறிய இயலும். அதனை நன்றாக உற்று கவனித்தால் கர்ப்பம் அடைந்துள்ளதை அறிந்துகொள்ளலாம்.

கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்ய மாதவிடாய் தள்ளிப்போவது மட்டும் அறிகுறி அல்ல. அதற்கு முன்னரே உடலில் தோன்றும் சில அறிகுறிகள் ஒரு குழந்தையை சுமக்க உடல் தயாராகி வருவதை உங்களுக்கு உணர்த்த ஆரம்பித்துவிடும். அப்படிப்பட்ட தருணத்தை நாம் முன்னரே அறிந்து கொள்ள முடியும் அதற்கான எளிய வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.

எல்லா பெண்களுக்கும் ஓரே மாதிரியான அறிகுறிகள் தென்படுவதில்லை. ஆனால் சில பொதுவான அறிகுறிகளை வைத்து கண்டு பிடித்து விடலாம்.

Pregnancy Symptoms: கர்ப்பமாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!

கர்ப்பம் தரித்திருத்தலை எத்தனை நாட்களில் அறிய முடியும்:

ஓரு பெண் கர்ப்பம் அடைந்தால் என்பதை அவர்களின் மாதவிடாய் சூழற்சியை வைத்தே அறிந்து கொள்ளலாம். மாதமாதம் மாதவிடாய் சரியாக கணக்கிடப்பட்டு நாட்கள் தள்ளி போகின்றனவா என்பதை அறிந்து கொள்வதே முதல் அறிகுறி.

இதையும் படியுங்கள்: அதிக டீ குடிப்பது ஆயுளை அதிகரிக்கிறது பிரிட்டன் ஆய்வில் தகவல்

ஒரு சாதாரண மாதவிடாய் சுழற்சி என்பது 21 முதல் 35 நாட்கள் வரை இருக்கும். குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் பெண்களின் மாதவிடாய் ஆனது 7 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் தள்ளிப்போனால் கர்ப்பமாக இருக்கிறீர்களா? என மருத்துவரிடம் பரிசோதித்துக்கொள்வது நல்லது.

கர்ப்பத்தை கண்டுபிடிப்பது எப்படி:

இன்றைய கால கட்டத்தில் மருந்து கடைகளில் கிடைக்கும் டெஸ்ட் கிட்டை வாங்கி கர்ப்ப பரிசோதனை செய்யலாம். அதில் இரண்டு கோடுகள் வந்தால் நீங்கள் கர்பம் என்றும், ஒரு கோடு மட்டும் வந்தால் நீங்கள் கர்பம் இல்லை என்றும் அர்த்தம்.

ஆனால், முந்தைய காலங்களிலெல்லாம் இது போன்ற மெடிக்கல் கிட்கள் ஏதும் கிடையாது. இருந்தும், கர்ப்பத்தைக் கண்டறிய கையில் நாடி பிடித்து பார்த்து கண்டறிந்து கொண்டனர். இதுபோல கர்ப்பத்தை கண்டறிய பல வழிமுறைகள் உள்ளன. சில வீட்டுப் பொருட்களை வைத்துக் கூட வீட்டில் கர்ப்பத்தை உறுதி செய்து கண்டறியலாம்.

கர்ப்பத்திற்கான அறிகுறிகள்:

  • பெண்களுக்கு ஆரம்ப நாட்களில் குமட்டல், வாந்தி, பசியின்னை போன்ற அறிகுறிகள் தோன்றும்.
  • வாசணைகளின் மூலம் குமட்டல் வாந்தி ஏற்படும். மேலும் உடல்சோர்வு காணப்படும்
  • கருத்தரிக்கும்போது ஒரு பெண், அவர்களது மார்பகத்திலே சில மாற்றங்களை அவர்களால் உணர முடியும். தாய் பால் சுரப்பதற்கான ஹார்மோன்கள் தயாராவதால் ஓருவிதமான மாற்றம் நிகழும்.
  • மார்பகங்களின் காம்புகள் கருநிறமடைவது போல தோன்றும். மேலும் மென்மையான காம்களாக மாற்றம் அடையும்.
  • மிகவும் ஆரம்ப கால அறிகுறிகளில் ஓன்றாக அடிக்கடி சிறுநீர் கழித்தல் உணர்வு ஏற்படுதல்களில் ஓன்றாகும்.
  • கர்ப்பிணி பெண்கள் சிறுநீரை அடக்கி வைக்காமல் அவ்வப்போது சிறுநீர் கழிப்பது உடலுக்கும் மனதுக்கும் பலம் கொடுக்கும்.
  • கர்ப்ப காலங்களில் உடல் எடை சற்று அதிகரித்தல் பொதுவானது.
  • பிடித்த உணவினை உண்டாலும் கூட சிலருக்கு வாந்தி ஏற்பட்டு அசதிக்கு உட்படுத்தும்.
  • கர்ப்ப காலத்தை எட்டியுள்ள பெண்கள் அதிக பசியை உணர்வார்கள். கருத்தரிப்பால் உடலில் ஏற்பட்டுள்ள ஹார்மோன் மாற்றம் மட்டும் ஊட்டச்சத்திற்கான தேவை அதிகரிப்பதால் பெண்ணுக்கு பசியும், தாகமும் அதிகரிக்கும்.
  • கடுமையான தலைவலி அடிக்கடி விட்டு விட்டு தலைவலி வந்தால், அதுவும் கர்ப்பத்திற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

  • மயக்கம் கர்பிணிப்பெண்களுக்கு பொதுவான ஒன்றே. கரு வளரும் போது பெண்களின் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும் அதில் ஒன்று மயக்கம்.
  • முதுகுவலி கர்ப்பிணிப் பெண்களிடையே மிகவும் பொதுவான புகார்களில் ஒன்றாகும். ஏனென்றால், குழந்தைக்கு ஏற்றவாறு கருப்பை விரிவடைகிறது.

இப்படியாக பல மாற்றங்களை கர்ப்பம் தரிக்க போகும் பெண்களின் உடல்களில் மாற்றம் நிகழும். இவை பொதுவானவையே பயம் கொள்ள தேவையில்லை அப்படி ஏதாவது சந்தேகமோ அல்லது மருத்துவரை அணுகினால் நன்றாக இருக்கும் என்றால் அதையும் செய்து கொள்வது நல்லது. 10 மாதமும் தனக்கும் தன் குழந்தைக்காகவும் பல இன்னல்களையும் நிறைய மகிழ்ச்சிகளையும் அனுபவித்து நல்ல முறையில் குழந்தையை பெற்றேடுப்பதே பெண்ணுக்கு இன்பம்.

இது போன்ற உடல்நலம், ஆன்மீகம், தமிழ் இலக்கியம், அன்றாட செய்திகள், ஜோதிடம், சமையல் என பல எண்ணற்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை அணுகுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here