பிரேம்ஜி: இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன்கள் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி அமரன். இதில் 44 வயதாகும் பிரேம்ஜி இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. சில மாதங்களுக்கு முன் பாடகி வினைதா என்பவருடன் பிரேம்ஜி அமரன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியாகின. இதில் ‘எனது லவ்’ என வினைதா இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டு அந்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இதையடுத்து இருவரும் காதலிப்பதாக தகவல் பரவியது. பின்னர் இவர்களை பற்றிய பேச்சு எதுவும் இல்லை.
இப்போது மீண்டும் பிரேம்ஜியை அணைத்துக்கொண்டிருக்கும் போட்டோவை பாடகி வினைதா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் எனது கணவருடன் மீண்டும் சேர்ந்துவிட்டேன் என பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதா? எப்போது ஆனது? என கேள்விகள் கேட்டும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லியும் கமென்ட்டுகளை வெளியிட்டும் வருகின்றனர். இது குறித்து பிரேம்ஜி எதுவும் சொல்லாமல் அமைதி காத்து வருகிறார். கங்கை அமரன் தரப்பும் விளக்கம் எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.