நடிகர் சூர்யா நடித்த படமான சூரரைப் போற்று படத்திற்கு கிடைத்த 5 தேசிய விருதுகளை செப்டம்பர் 30ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சூர்யா உள்ளிட்டவர்களுக்கு விருதுகளை வழங்குகிறார் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.
கொரோனா காலகட்டத்தில் திரையரங்குக்கு வராமல் ஓடிடி தளம் வழியாக வெளியான படம் சூரரைப் போற்று. இந்த படத்தில் நடிகர் சூர்யா அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். மேலும், கர்ணாஸ், ஊர்வசி என பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
இப்டத்தை சுதா கொங்குரா இயக்கி இருந்தார். இப்படத்திற்கு இசையில் வலுக்கூட்டும் வண்ணத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்தார். இப்படத்திற்கு பெரும் அளவில் வெற்றி பெற்றது. மேலும் 68 வது சர்வதேச பட விருது வழங்கும் விழாவில் இப்படத்தின் மூலம் 5 விருதுகள் கிடைத்தது.

சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசை, உள்ளிட்ட பல பிரிவுகளில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஒடிடி தளத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 5 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது தமிழ் சினிமாவை நோக்கி இந்திய சினிமா திரும்பி பார்க்க செய்துள்ளது.
ரயில் கூட நிற்காமல் செல்லும் சோழவந்தான் சூர்யா, எப்படி ஆகாயத்தை அளந்த ஆள வந்தானாக மாறினார் என்பதை அதன் வலி, வேதனைகளுடன் எளிய வாழ்வின் அழகியல்களும் மாறாமல் அற்புதமாகச் சொல்லிய சூரரைப்போற்று தேசிய விருதுகளுக்கு முன்பே மக்களின் கைதட்டல் விருதுகளை பெற்றது.
உடல் மொழியிலும், உணர்வுபூர்வமான காட்சிகளிலும் சூர்யா வெளிப்படுத்திய நடிப்பு சூர்யாவை சிறந்த நடிகருக்கான விருதை பெற செய்துள்ளது. தந்தை மரணத்தின் போது விமானத்தில் பயணிக்க பணம் இல்லாததால் இறுதிச்சடங்கில் உரிய நேரத்திற்கு பங்கேற்க முடியாமல் “விமான நிலையத்தில் இருக்கும் பயணிகளிடம் தனது அட்ரஸை துண்டு சீட்டில் எழுதிக்கொடுத்துவிட்டு பிச்சையெடுக்காத கொடுமையாக பணம் கேட்டு கெஞ்சும் போதும்”
“அம்மாவின் காலைப்பிடித்துக் கொண்டு கதறும் போதும்” நடிப்பில் நெடுமாறன் ராஜாங்கமாகவே வாழ்ந்த சூர்யாவை படம் வெளிவந்த போதே போற்றியது தமிழ் சினிமா.
சூரரைப் போற்று படத்திற்கு கிடைத்த 5 தேசிய விருதுகளை செப்டம்பர் 30ம் தேதி நடைபெற உள்ள தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சூர்யா உள்ளிட்டவர்களுக்கு விருதுகளை வழங்குகிறார் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.