புதிய 1,2,5,10,20 ரூபாய் நாணயங்களை வெளியிட்டார் பிரதமர் மோடி. இந்தியாவில் ஏற்கனவே ஓரு ரூபாய் நாணயம் முதல் 10 ரூபாய் நாணயம் வரை புழக்கத்தில் இருந்து வருகிறது. நாணயங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகமாக தேவைப்படுவதால் புதிய நாணயங்களை குறிப்பாக 20 ரூபாய் நாணயங்களை வெளியிட வேண்டும் என்று அரசு பரிசீலனை செய்து வந்தது.
இந்நிலையில் 1,2,5,10,20 ரூபாய் நாணயங்களை பிரதமர் மோடி வெளியிட்டார். மேலும் அந்நாணயங்கள் பார்வை குறைபாடு உள்ளவர்களால் எளிதில் கண்டறியும் வண்ணம் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த நாணயங்கள் ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ (AKAM) என்னும் லோகோவை பெற்றிருக்கும்.
ஜூன் 6 முதல் 11, 2022 வரை ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ (AKAM) இன் ஒரு பகுதியாக இந்த வாரம் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நாணயங்கள் விரைவில் இந்தியா முழுவதும் மக்கள் புழக்கத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்வையற்றவர்களின் நலன் கருதிய வெளியிட்டுள்ள இந்நாணயங்கள் மக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
“இந்த புதிய தொடர் நாணயங்கள் ‘அமிர்த கல்’ இலக்கை மக்களுக்கு நினைவூட்டும் மற்றும் நாட்டின் வளர்ச்சியை நோக்கி உழைக்க மக்களை ஊக்குவிக்கும்” என்று மோடி கூறினார்.