ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லஷ்மி படங்களை அச்சிடுங்கள் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதிய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி புகைப்படங்களுடன் விநாயகர் மற்றும் லஷ்மி தேவி புகைப்படங்களை அச்சிடுங்கள் என மத்திய அரசுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் பொருளாதார நிலையை சீர்ப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கையுடன் சேர்த்து கடவுளின் ஆசிர்வாதமும் நமக்கு தேவைப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
இரு தினங்களுக்கு முன் நாட்டின் பள்ளிகளை மேம்படுத்து நாம் ஓன்றிணைந்து பாடுபடுவோம் என பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்திருந்தார். ”நாங்கள் டெல்லி கல்வித் துறையில் அற்புதமான வேலையை செய்துள்ளோம். ஐந்து ஆண்டுகளில், டெல்லியின் அனைத்து அரசுப் பள்ளிகளும் குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள பள்ளிகளையும் ஐந்தாண்டுகளில் மேம்படுத்தலாம். எங்கள் அனுபவத்தை இதற்கு முழுமையாக பயன்படுத்துங்கள். நாட்டுக்காக ஒன்றாக செயல்படுவோம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது”.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற இந்திய பொருளாதார ஆலோசனைகள் பற்றிய கலந்தாய்வில் பேசிய டெல்லி முதலமைச்சர் இந்தோனேசியாவின் உதாரணத்தை மேற்கோள் காட்டிய அர்விந்த் கேஜ்ரிவால், “இந்தோனேசியா ஒரு முஸ்லீம் நாடு, அந்நாட்டின் மக்கள்தொகையில் 85% முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அங்கு இந்துக்களின் மக்கள் தொகை, மொத்த மக்கள்த்தொகையில் 2% மட்டுமே என்றாலும், அவர்களின் நாணயத்தில் விநாயகப் பெருமானின் படம் உள்ளது”. இது ஒரு முக்கியமான விஷயம் என்று நான் நினைக்கிறேன். இதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
“ரூபாய் நோட்டில், லட்சுமி தேவியும், விக்ன விநாயகரும் இடம் பெருவதால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்று நான் கூறவில்லை, அதற்கு நிறைய முயற்சிகள் தேவைப்படும், ஆனால் கடவுளின் ஆசீர்வாதம் இருந்தால் மட்டுமே முயற்சிகள் பலனளிக்கும்” என்று கெஜ்ரிவால் கூறினார்.