பிருத்விராஜ்: மலையாள நடிகரான பிருத்விராஜ் மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர். அங்கு அவர் சில படங்களை இயக்கியும் உள்ளார். பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர் தமிழில் மாெழி, கனா கண்டேன், சத்தம் போடாதே, நினைத்தாலே இனிக்கும், ராவணன், காவியத் தலைவன், அபியும் நானும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்தியில் 3 படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதையடுத்து இந்தி படத்திலும் வில்லனாக நடிக்க தேர்வாகியுள்ளார்.
அமிதாப் பச்சன், கோவிந்தா நடித்த படம் ‘படே மியான் சோட்டே மியான்’. இந்த படம் தற்போது அதே பெயரில் ரீமேக் ஆக இருக்கிறது. அமிதாப் பச்சன் வேடத்தில் தற்போது அக்ஷய் குமாரும், கோவிந்தா வேடத்தில் டைகர் ஷெராப்பும் நடிக்கிறார்கள். இப்படத்தை அலி அப்பாஸ் ஜாபர் இயக்குகிறார். இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க நடிகர் பிருத்விராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். பிருத்விராஜ் எப்போதும் சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறார். இப்படமும் வில்லனாக அவருக்கு ஒரு சிறந்த அங்கீகாரத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.