கோவை-சீரடி நாட்டின் முதல் தனியார் ரயில் சேவை தொடக்கம்

0
10

கோவை-சீரடி: நாட்டின் முதல் தனியார் ரயில் சேவை நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது.

ஓன்றிய அரசின் பாரத் கௌரவ் திட்டத்தின் மூலம் இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவை தன் முதல் பயணத்தை கோவையிலிருந்து தொடங்கி சீரடி வரை இயக்குகிறது. நேற்று மாலை 6 மணிக்கு புறப்பட்டது.

கோவையிலிருந்து சீரடிக்கு போக்குவரத்து ஏற்பாடு செய்து தர நிறைய கோரிக்கைகள் பொது மக்களால் வைக்கப்பட்டது. அதனை அடுத்து அரசாங்கம் பாரத் கௌரவ் திட்டத்தின் மூலம் 5 நகரங்களில் இருந்து சீரடிக்கு போக்குவரத்து வசதி செய்ய திட்டமிட்டது. அதில் கோவையும் ஓன்று இந்த ரயிலை கோவையை சார்ந்த எம் என் சி பிராப்பர்டி டெவலப்பரஸ் என்ற தனியார் நிறுவனம் இயக்குகிறது.

கோவை-சீரடி நாட்டின் முதல் தனியார் ரயில் சேவை தொடக்கம்
கோவை-சீரடி நாட்டின் முதல் தனியார் ரயில் சேவை தொடக்கம்

கோவையில் இருந்து சீரடிக்கு செல்ல 1458 கிலோமீட்டர் தூரத்துக்கு ஸ்லீப்பர் கட்டணம் 1,280 ரூபாய். ஆனால் தனியார் நிறுவனம் வசூலிப்பது 2500 ரூபாய். மூன்றடுக்கு குளிர்சாதன படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூபாய் 2,360 ஆனால் தனியார் கட்டணம் ரூபாய் 5000.

குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் 4,820 ரூபாய் ஆனால், தனியார் கட்டணம் 7000 ரூபாய். குளிர்சாதன முதல் வகுப்பு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ.8,190 ஆனால் தனியார் கட்டணம் ரூ.10000 என கட்டணங்கள் நிர்ணியிக்கப்பட்டு பயணம் தொடங்கியது. இந்த ரயிலானது வாரம் ஓரு முறை பயணத்தை மேற்கொள்கிறது. அதற்கான முன்பதிவு டிக்கட்களை தனியார் நிறுவனம் நிர்வகிக்கிறது.

இந்த ரயில் கோவையிலிருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக பெங்களூரு சென்று ஆந்திரா மாநிலம் மந்த்ராலயம்  வழியாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சீரடிக்கு செல்கிறது. ரயிலில் பயணம் செய்யும் மக்களுக்கு ஏற்ப அனைத்தும் சிறந்த முறையில் பல வசதிகளை வழங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here