புரோ கபடி 2022: கோப்பையை வென்ற ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி

0
5

புரோ கபடி 2022: 9 வது புரோ கபடி போட்டிகள் கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கியது. பெங்களூர் மற்றும் மும்பையில்  நடைபெற்றது வந்தது. விறுவிறுப்பான இந்த போட்டிகளில் 12 அணிகள் பங்கு பெற்றது. பெரிதும் நம்பிக்கையுடன் விளையாடி வந்த தமிழ் தலைவாஸ் அணி ஆரம்பத்தில் பல சறுக்கல்களை சந்தித்தாலும் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

டபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகளை வீழ்த்திய தமிழ் தலைவாஸ் அணி, தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளையும் வீழ்த்தி வெற்றி பெற்று தொடர் வெற்றிகளை பதிவு செய்தது. இப்படி பலம் வாய்ந்த அணிகளையும் வென்று அசத்தியது.

ப்ளே ஆப் சுற்றில் வெற்றி கண்டு அரையிறுதிக்கு தகுதி பெற்று தமிழ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் எதிர்பார்பையும் ஏற்படுத்தியது. ஆனால், அரையிறுதுயில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, 49-29 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு முன்னேறியது.

புரோ கபடி 2022: கோப்பையை வென்ற ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி

2வது அரையிறுதியில் புனேரி பால்டன் அணியிடம் 39-37 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது. இதனால் முதன் முறையாக தமிழ் தலைவாஸ் அரையிறுதி சென்று இறுதி போட்டியில் வென்று கோப்பை வெல்லும் என்ற கனவு தகர்ந்தது.

இந்நிலையில், இன்று நடந்த இறுதி போட்டியில் புனேரி பால்டன் அணி மற்றும் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோதின. அதில் இரண்டாவது முறையாக ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி கோப்பையை வென்று நடப்பு சாம்பியன் பட்டத்தை வென்றது.

புனேரி பால்டன் அணியை 33-29 என்று ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதனை முன்னிட்டு ஜெய்ப்பூர் கபடி ரசிகர்கள் விழா கோலம் பூண்டது போல் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மகிழ்ச்சியில் ஆழ்ந்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அதிர்ச்சி தோல்வி

இது போன்ற செய்திகளை அறிந்து கொள்ள தலதமிழ் இணையதளத்தை பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here