புரோ கபடி லீக்: முதன் முறையாக தமிழ் தலைவாஸ் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த ஆண்டுக்கான 9வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 7ந் தேதி பெங்களூருவில் தொடங்கியது. இதில் 12 அணிகள் போட்டியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் தமிழ் தலைவாஸ் அணி பல தோல்விகளை சந்தித்தாலும் தற்போது அதிரடி ஆட்டத்தால் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று பெருமை சேர்த்துள்ளது.
டபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகளை வீழ்த்திய தமிழ் தலைவாஸ் அணி, தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளையும் வீழ்த்தி வெற்றி பெற்று தொடர் வெற்றிகளை பதிவு செய்தது. பலம் வாய்ந்த அணிகளையும் வென்று அசத்தியது.

இறுதியாக நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் – யுபி யோத்தா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய தமிழ் தலைவாஸ். 43 – 28 என்ற கணக்கில் புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தமிழ் தலைவாஸ் அணி தகுதி பெற்றது.
இதையும் படியுங்கள்: ஹூட் மேன் ரோஹூத் சர்மா அதிக சிக்சர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.