புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அதிர்ச்சி தோல்வி

0
5

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அரையிறுதி போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியது. இதனால் தமிழ் தலைவாஸ் அணியின் கனவு தகர்ந்தது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இதற்குமுன் முதன் முறையாக தமிழ் தலைவாஸ் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த ஆண்டுக்கான 9வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 7ந் தேதி பெங்களூருவில் தொடங்கியது. இதில் 12 அணிகள் போட்டியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் தமிழ் தலைவாஸ் அணி பல தோல்விகளை சந்தித்தாலும் தற்போது அதிரடி ஆட்டத்தால் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று பெருமை சேர்த்துள்ளது.

டபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகளை வீழ்த்திய தமிழ் தலைவாஸ் அணி, தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளையும் வீழ்த்தி வெற்றி பெற்று தொடர் வெற்றிகளை பதிவு செய்தது. பலம் வாய்ந்த அணிகளையும் வென்று அசத்தியது.

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அதிர்ச்சி தோல்வி

இந்நிலையில், நேற்று (வியாழக்கிழமை) இரண்டு அரைஇறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இரவு 7.30 மணிக்கு நடந்த முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, 49-29 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு முன்னேறியது.

இந்த சூழலில் இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற 2-வது அரைஇறுதியில் அஜிங்யா பவார் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, பாசெல் அட்ராசலி தலைமையிலான புனேரி பால்டனை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பால்டன் அணியிடம் 39-37 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது.

இதன்மூலம் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய தமிழ் தலைவாஸ் அணியின் கோப்பையை வெல்லும் கனவு தகர்ந்தது. புரோ கபடி லீக் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் பெங்களூரு புல்சை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி இறுதிபோட்டிக்கு முன்னேறிய நிலையில், இரண்டாவது அரையிறுதி போட்டியில் தமிழ் தலைவாசை வீழ்த்தி புனேரி பால்டன் அணி இறுதிபோட்டிக்கு முன்னேறி உள்ளது.

இந்நிலையில் வரும் 17ம் தேதி (சனிக்கிழமை) நடக்கும் மகுடத்திற்கான இறுதிப்போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியுடன், புனேரி பால்டன் அணி மோதுகிறது.

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here