இலங்கை அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் சற்றுமுன் கைப்பற்றினர்.
இலங்கையில் சில மாதங்களாகவே கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதன் காரணமாக முக்கிய தலைவர்களில் ஓருவரான மகிந்த்ர ராஜபக்ஷே வேறு நாட்டிற்கு ஓடினார். அதன் பிறகு கோத்தபய ராஜபக்ஷே பதவி வகித்து வந்தார். பொருளாதார நெருக்கடிக்கான முக்கிய காரணங்கள் இவ்விருவர் தான் என மக்கள் பல மாதங்களாக போராட்டங்களில் ஈடுப்பட்டு வந்தனர்.
அதன் பின்னர் ரணில் விக்ரம்சிங்கே பதவி ஏற்றார். இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சரி செய்ய 1 அல்லது 2 வருடங்கள் வரை ஆகும் என குறிப்பிட்டார். பல ஆராய்ச்சியாளர்களையும் பொருளாதார நிபுணர்களையும் கலந்து ஆலோசனைகளை பெற்றும் வருகிறார்.
இந்நிலையில், உணவு பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்தது பெட்ரோல் டீசல் என 1லிட்டர் 500 ரூபாய்க்கும் ஓரு சவரன் தங்கம் நகை 1.50,000 மாக விற்கப்பட்டது. சாதாரண மக்கள் பயன்படுத்தும் புதிய சைக்கிள் ஓரு லட்சத்திற்கும் விற்கப்பட்டது.

இதன் விளைவாக மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டனர். பல இளைஞர்கள் நாட்டை விட்டே வெளியேறினர். பல நாட்களாக காத்திருந்த மக்கள் பெரும் புரட்சியுடன் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இதன் ஓரு பகுதியாக இலங்கை மக்களும் போராட்டக்காரர்களும் பெருமளவில் சேர்ந்து பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். அங்கு இருக்கும் நீச்சல் குளத்தில் போராட்டக்காரர்கள் குளித்து விளையாடியும் நாட்டின் இவ்வளவு நெருக்கடி ஏற்பட்ட போதும் நிறைய சொகுசு கார்கள் மாளிகையில் நிறுத்தி வைக்கப்பட்டதையும் மக்கள் பார்த்து வேதனை அடைந்தனர்.
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக அதிபர் மாளிகையை மக்களாகிய போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில், பதவி விலகும் கோரிக்கை பற்றி அனைத்து கட்சி கூட்டத்தின் முடிவுக்கு கட்டுப்படுகிறேன் என அதிபர் கோத்தபய ராஜ பக்ஷே தெரிவித்துள்ளார்.