ஆடி பட்டம் தேடி விதை என்ற பழமொழி விளக்கம்

0
30

ஆடி பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு வழங்கும் உன்னதமான விளக்கத்தை நாம் இந்த பதிவில் பார்போம்.

‘நீர் நீரியின்றி அமையாது உலகு’ என்னும் வள்ளுவரின் வாக்கு மிக ஆழமானது. மனிதன் உயிர் வாழ முதன்மையான தேவைகளில் ஓன்று நீர். ஆந்நீரினை போற்றும் விதத்தில் கொண்டாப்படுவது ஆடி பெருக்கு. சரி விவாசயத்திற்கு முதன்மை ஆதாரமாக விளங்குவதும் தண்ணீர் தான். அந்த நீர் ஆடி மாதத்தில் மழையின் மூலமாக நமக்கு கிடைக்கும்.

விளைநிலங்களுக்கான முதல் மழையைக் கொண்டுவரும் மாதம் ஆடி. ஆறுகளில் புது வெள்ளம் பாயும். இது புதிய விளைச்சலுக்குக் ஏதுவாக இருக்கும். விவசாயிகள் புதுவெள்ள நீரைத் தொழுது தங்கள் உழவுப் பணிகளைத் தொடங்குவர். இதனால்தான் நம் முன்னோர்கள் ஆடிப் பட்டம் தேடி விதை என்னும் பழமொழியை கூறியுள்ளார்கள்.

ஆடி பட்டம் தேடி விதை என்ற பழமொழி விளக்கம்

மேலும் ஆடி மாதத்தில் ஓரிரு முறை வயலுக்கு தண்ணீர் பாய்ச்சினால் போதும், புரட்டாசியில் இருந்து தொடர்ச்சியாக கிடைக்கும் மழையின் உதவியால் பயிர் வளர்ந்துவிடும். மேலும் இந்த மாதத்தில்தான் மண்ணில் விழும் விதைகள் முழுமையாக முளைக்கத் தேவையான அருமையான தட்பவெப்ப சூழ்நிலை நிலவும். ஆடி 18-ம் தேதியும், அதற்குப் பிறகு விதைக்கும் விதைகள் நன்றாக முளைக்கும். தண்ணீர் பாய்ச்சி பயிர் செய்வதென்றால் குறுவை சாகுபடியில் நெல் விதைக்க தொடங்குவார்கள். ஆனால், மானாவாரி பயிர்களுக்கு ஆடிப்பட்டம் மிகவும் சிறந்த பட்டமாகும்.

உளுந்து, சோளம், கம்பு, குதிரைவாலி உள்ளிட்ட தானியங்கள் விதைக்கலாம். குறிப்பாக, சாமை விதைப்புக்கு ஏற்ற அருமையான பட்டம். அவரை, கத்திரி, தக்காளி போன்ற காய்கறி பயிர்களைச் சாகுபடி செய்யலாம். “வாழை” நடவுக்கு ஏற்ற மாதம். ஆனி மற்றும் ஆடிப்பட்டங்கள் “செம்பருத்தி” சாகுபடிக்கு ஏற்றவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here