பழமொழிகள் விளக்கம்

0
83

பழமொழிகள் விளக்கம்: Proverbs in English and Tamil: அன்றாடம் நாம் வாழ்வில் பல பழமொழிகளை நம் முன்னோர்கள் கூற கேட்டிருப்போம். அப்பழமொழிகள் சிந்தனைக்குரியதாகவும் நகைச்சுவை மிக்கதாகவும் அமைந்திருக்கும். நாம் ஏதாவது ஓரு செயலை செய்வோம் அச்செயலுக்கு ஏற்ப சட்டென்று ஓரு பழமொழியை நம் முன்னோர்கள் கூறி விடுவர். பழமொழிகள் விடுகதை போல அமைந்து நம் அறிவை பெருக்கும் சிந்தனையை தூண்டும் வண்ணம் அமையும் என்பதில் ஐயமில்லை.

இன்றும் கிராமப்புறங்களில் பழமொழிகள் பேச்சு வழக்கில் அமைந்திருப்பதை காண முடிகிறது. இந்த பதிவில் popular Tamil Proverbs with English meaning உடன் பதிவிட்டுள்ளோம். படித்து பயன்பெறுக.

பழமொழிகள் விளக்கம்
 • ஆழம் பார்க்காமல் காலை விடாதே – Don’t step in the river without knowing its depth.
  Look before you leap.
 • காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு  – Even a crow thinks its child is golden.
 • யானைக்கும் அடி சறுக்கும் – Even elephants do slip. Even the mighty do slip.
 • எறும்பு ஊற கல்லும் தேயும்  – Even ants can wear out a rock (literal) Persistence never fails.
 • அகத்தின் அழகு முகத்தில் தெரியும் – The beauty of the soul is in known in the face (literal)
  Meaning: Face is the index of the mind.
 • ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது – What won’t bend at five will not bend at fifty (literal)
 • குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு – A drunkard’s words are gone by the next dawn
 • தனி மரம் தோப்பு ஆகாது – A single tree doesn’t make an orchard.
 • மாமியார் உடைத்தால் மண்குடம். மருமகள் உடைத்தல் பொன்குடம் – If the mother-in-law breaks it, it is a mud pot. If the daughter-in-law breaks it, it is a golden pot.
 • நிறைகுடம் நீர் தளும்பாது. குறைகுடம் கூத்தாடும் – Fully Filled pot does not spill (literal) Empty vessels make the most noise.
 • சுடும் வரை நெருப்பு, சுற்றும் வரை பூமி, போராடும் வரை மனிதன். நீ மனிதன் – Fire lasts only as long as it heats. The earth lasts only as long as it revolves. Man lasts only as long as he tries. You are man (literal)
 • மயிரைக் கட்டி மலையை இழு, வந்தால் மலை போனால் மயிர் – Pull a mountain by tying a hair to it. If you succeed you will get a mountain, if you lose you will lose a hair (literal).
 • முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் – A thorn can only be removed with another thorn (literal) Fight fire with fire.

 • நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் – Only when in the sun do you miss the shade.
 • ஆற்றில் போட்டாலும் அளந்து போடு – Even when throwing in the river, measure what you throw.

இதையும் படியுங்கள் : ஆடி பட்டம் தேடி விதை என்ற பழமொழி விளக்கம்

 • புலி பசித்தாலும் புல்லை தின்னாது – Even hunger wont make tiger eat grass (literal)A person never loses his nature no matter how hard-pressed.
 • கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு – Alternatively “Known is a drop, unknown is an Ocean”. (Source: Avvaiyar)
 • கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது – The mustard its small, but it is still too spicy (literal) Don’t measure the worth of a person by their size/shape
  Size does not matter.
 • சிறு நுணலும் தன் வாயால் கெடும் – The frog that talks is soon dead (literal)
  Know when to keep quiet.
 • மூர்த்தி சின்னதனாலும் கீர்த்தி பெரியது – The idol may be small, its fame is big.
  Don’t judge the worth of a person by their size.
 • பாம்பின் கால் பாம்பறிம் – Only a snake will know the tracks left by another snake. (literal) The persons involved in similar activities know each other better than others do.
 • மி்ன்னுவதெல்லாம் பொன்னல்ல – All that glitters is not gold
 • தோல்வி உன்னை தோற்கடிக்கும் முன் தோல்வியை நீ தோற்கடித்து விடு – Defeat defeat before defeat defeats you. (Source: Swami Vivekananda)
 • வீட்டைக் கட்டிப்பார், கல்யாணத்தைப் பண்ணிப்பார் – Build a home, organize a wedding (literal) If you think daily life is painful, try building a home or organizing a wedding.
 • வெறும் கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம் – There is nothing called empty hands. You always have 10 fingers in it Your effort is what all you have got.

இது போன்ற பழமொழிகள் விளக்கம் மற்றும் செய்திகள், ஆன்மீகம், ஜோதிடம் தொடர்பான தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here