இந்திய ஓலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக பி.டி.உஷா போட்டியின்றி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது எம்.பியாகவும் இருந்து வருகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் 10ம் தேதி வெளியாகும்.
இந்தியாவின் தங்க மங்கை என்றும், வேக ராணி என்றும், பய்யோலி எக்ஸ்பிரஸ் என்றும் புழகப்படுபவர் இவர் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கியவர். இந்திய தடகள வீராங்கனை ஆவார். 1985 மற்றும் 1986 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகத் தடகள விளையாட்டுகளில் முதல் பத்து பெண் விளையாட்டளர்களில் ஒருவராக விளங்கியவர். இந்த சாதனையை இதற்கு முன்பும், இதற்கு பின்பும் வேறு எந்த இந்தியரும் இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை.
சர்வதேச தடகளப் போட்டிகளில் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர். தன் அதிவேக ஓட்டத்தின் மூலம் தனக்கென திறமையை வளர்த்து கொண்டவர். பல்வேறு விருதுகளை பெற்றவர். தற்போது, பாஜக வின் மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்திய ஓலிம்பிக் சங்கத்தின் தலைவருக்கான தேர்தல் டிசம்பர் 10ந் தேதி நடக்கவுள்ள இந்த நிலையில், இவர் விண்ணப்பித்திருந்தார் நேற்று வரை அந்த பதவிக்கு யாரும் விண்ணப்பிக்காததால் போட்டியின்றி இவரே தலைவாராக நியக்கப்படுவார் என்பதால் அவருக்கு பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் முதன் முறையாக இந்திய ஓலிம்பிக் சங்கத்தின் தலைவராக ஓரு பெண் நியமிக்கப்படுவது இதுவே முதன்முறை.
தற்போது 58 வயதாகும் பி.டி. உஷா, பல்வேறு ஆசியப் போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார். அவர், 1986ஆம் ஆண்டு தென்கொரிய தலைநகர் சோலில் நடந்த போட்டியில் வென்ற நான்கு தங்கம் உட்பட ஆசியப் போட்டிகளில் 11 பதக்கங்களை வென்றுள்ளார்.
இதையும் படியுங்கள்: FIFA WORLD CUP 2022: சவூதி வீரர்களுக்கு பரிசு அறிவிக்கப்பட உள்ளது
1983 முதல் 1998ஆம் ஆண்டு வரையிலான ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் 14 தங்கங்கள் உட்பட 23 பதக்கங்களை வென்றுள்ளார்.
இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.