புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் தொடங்கியது

0
18

புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் நேற்று ஜூன் 6 ல் கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது.

புதுச்சேரியில் மனக்குல விநாயகர் மிக பிரசித்திப் பெற்ற கோவில் அதைபோல புதுச்சேரி காந்தி வீதி, பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில் பிரசிதி பெற்ற தலம் அக்கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றுத்துடன் சிறப்பாக நடைப்பெற்றது.

விழாவினை ஓட்டி சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது. இதில் அமைச்சர் லட்சுமி நாராயணன் உட்பட ஏராலமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் தொடங்கியது
புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் ஜூன் 6 ம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது

இதனை தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று காலை 10.30 மணியளவில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின் குதிரை வாகனத்தில் அமர்ந்து அருள்பாலித்தார். இரவு தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். நாளை 8 ம் தேதி திருமஞ்சனம் முடிந்து யாலி வாகனத்திலும், ஹனுமந்த வாகனத்திலும் எழுந்தருளுவார்.

வியாழக்கிழமை பல்லக்கு ஸ்ரீ வேணுகோபாலர் திருக்கோலம், காலை 10 மணிக்கு திருமஞ்சனம், இரவு 7.30 மணிக்கு சேஷவாகன புறப்பாடு நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 14-ந் தேதி நடக்கிறது.

15-ந் தேதி 108 கலச திருமஞ்சனமும், சந்திரபிரபை வீதி உலா புறப்பாடும், 16-ந் தேதி தெப்ப உற்சவமும், 17-ந் தேதி முத்து விமானமும், 18-ந் தேதி புஷ்பபிரபையும், 19-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. 20-ந்தேதி பானக பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அறங்காவலர் வாரியத்தினர், பக்தர்கள் சபையினர் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here