புதினா இலையின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்: புதினா இலையை பலரும் வாசனைக்காக மட்டுமே பயன்படுத்துவதாக கருதுகின்றனர். முக்கியமாக பிரியாணி செய்யும் பொழுது புதினா இலையை போட்டு செய்யும் பொழுது அதன் மணம் அருமையாக இருக்கும். வாசணை தரும் இலையாக மட்டும் இல்லாமல் இதில் பல மருத்துவ குணங்களும் நிறைந்து உள்ளது.
நாம் அன்றாடம் இந்த புதினாவை பலவிதங்களில் செய்து சாப்பிடுகறோம். புதினா இலையை பயன்படுத்துவதால் உடல் குளிர்ச்சி அடைகிறது. புதினா ஓரு வாசணை மிகுந்த ஓரு மூலிகை தாவரமாக இருக்கிறது. இந்த புதினாவில் உள்ள பயன்களையும் மருத்துவ குணங்களையும் இப்பதிவில் அறியலாம்.
இதையும் கவனியுங்கள்: மக்காச்சோளம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

புதினாவில் உள்ள சத்துக்கள்:
புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறுவதில்லை என்பது இதன் முக்கிய அம்சமாகும்.
புதினாவால் ஏற்படும் பயன்கள்:
- அசைவ உணவு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவினை எளிதில் செரிமாணம் ஆக்குகின்றது.
- உடலில் உள்ள கெட்ட ரத்தத்தை சுத்தமாக்குகிறது.
- வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை அகற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறது.
- ஆஸ்த்மாவால் சிரமப்பட்டு மூச்சு வாங்குபவர்கள் எளிதாக மூச்சு காற்றை சுவாசிக்கும் நிலையை ஏற்படுத்தும்.
- பாலுட்டும் தாய்மார்களுக்கு மார்பக காம்புகளில் ஏற்படும் வலி மற்றும் காயங்களை எளிதாக ஆற்றும்.
- பற்களில் உள்ள கிருமிகளை அழித்து பற்களுக்கும் ஈறுகளுக்கும் நல்ல பலனை தருகிறது.
- பசியை தூண்டுகிறது மற்றும் மலச்சிக்கல் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.
- பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கும் சரியான மருந்தாக காணப்படுகிறது.
- ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது.
- வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது.
- புதினா கீரையை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும்.
- மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் இதன் சாரை முகத்தில் தடவி வர நல்ல பலனை அளிக்கிறது.
இது போன்ற எண்ணற்ற மருத்துவ குணங்களை பெற்றுள்ளது புதினா இலை எதையும் அளவாகவும் வாரத்திற்கு இரண்டு முறைகள் பயன்படுத்துவதால் எவ்வித உடல் பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம்.
உடல்நலம், ஆன்மீகம், ஜோதிடம், தமிழ் இலக்கியம், விளையாட்டு, சினிமா, செய்திகள் என அனைத்து தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.