புதுச்சேரி: புதுவையில் மணக்குல விநாயகர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. புதுவையின் கடற்கரை அழைகையும் அங்கு காணப்படும் காந்தி மண்டபம் பூங்காக்களை சுற்றிப் பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பர். அதிக வெளிநாட்டு பயணிகளும் இங்கு வந்து புதுவையின் அழைகை சுற்றி பார்த்து செலவர். அப்போது அருகில் இருக்கும் மணக்குல விநாயகர் கோவிலுக்கு சென்று வணங்கி வருவதையும் வாடிக்கையாக கொள்வர்.
இதனால் அனைத்து நாட்களிலும் இந்த கோவில் கூட்டம் நிறைந்து காணப்படும். மேலும், விடுமுறை நாட்களிலும் அதிகப்படியான மக்கள் வந்து தரிசனம் செய்வார்கள் அந்த தருணத்தில் அந்த கோவில் முன்னர் பக்தர்களுக்கு ஆசி வழங்கி அனைவரையும் மகிழ்விக்கும் லட்சுமி என்ற யானை இருந்து வந்தது.
விலங்குகளில் அனைவரும் விரும்பும் உயிரினமாக இருப்பது யானை உருவத்தில் பெரியதாக இருந்தாலும் மனிதனுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளும் குழந்தை போல் காணப்படும் உயிரனம் இந்த யானையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்த்து வருவார்கள்.

இந்த நிலையில், தமிழகத்தில் கோவில் யானைகளுக்கு ஆண்டுதோறும். 48 நாட்கள் புத்துணர்வு முகாம் நடத்தப்படுவது வழக்கம். கொரோனா காலத்தில் கோவில் யானைகளுக்கான இந்த புத்துணர்வு முகாம் நிறுத்தப்பட்டது. இந்த முகாமில் ஆண்டுதோறும் புதுவை மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியும் பங்கேற்று திரும்பும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக புத்துணர்வு முகாம் இல்லாததால் லட்சுமி யானைக்கு கோவில் நிர்வாகம் அருகில் உள்ள ஈஷ்வரன் கோவிலில் 15 நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டு வந்தது. இந்த காலக்கட்டத்தில் யானைக்கு வழக்கமாக வழங்கப்படும் பழங்கள் நிறுத்தப்பட்டு பனை, களி, தென்னை இலை, அரச இலை இவைகளுடன் ஊட்டசத்து மருந்துகளும் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று காலை லட்சுமியின் இருப்பிடமான ஈஸ்வரன் கோயில் இருப்பிடத்தில் இருந்து நடை பயணம் சென்றது. அப்போது கல்வே கல்லூரி அருகே சென்றபோது மயங்கி விழுந்தது சிறிது நேரத்தில் அங்கேயே உயிரிழந்தது. யானை லட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று சொல்லியுள்ளனர்.
இதன் காரணமாக புதுச்சேரி மக்கள் மற்றும் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். இதனால் கோவில் நடை சாத்தப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: புதுச்சேரியில் மாணவர் பயன்பாட்டுக்கு வந்த காமராஜர் மணி மண்டபம்
1996ம் ஆண்டு புதுச்சேரி மணக்குல விநாயகர் கோவிலுக்கு 5 வயது இருக்கும் போது வந்தது அப்போது முதல் மக்களிடம் நீங்கா அன்பை பெற்றது. தற்போது அந்த யானைக்கு 32 வயதாகும் நிலையில் உயிரிழந்துள்ளது.
இது போன்ற பலவித தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.