புதுச்சேரி: ஓரு வாரத்திற்கு பிறகு பள்ளிகள் இன்று முதல் திறப்பு

0
17

புதுச்சேரி: கடந்த சில வாரங்களாக குழந்தைகளை பாதித்த வந்த காய்ச்சல் காரணமாக பள்ளிகள் ஓரு வாரத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதன் பிறகு காய்ச்சல் இன்னும் குறையாத நிலையில் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டு காலாண்டு தேர்வு 30ம் தேதி வரை நடைபெறுகிறது. பிறகு பள்ளி ஓரு வராம் விடுமுறை அளிக்கப்பட்டு அக்டோபர் 6ம் தேதி வழக்கம் போல பள்ளிகள் தொடங்கும் என புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வந்தது. குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டனர்.இதன் காரணமாக கடந்த 17ம் தேதி முதல் 25ம் தேதி (நேற்று) வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிக்கல்வித்துறை விடுமுறை அறிவித்தது. இருந்தும் புதுச்சேரியில் காய்ச்சல் குறையாமல் பரவலாக இருந்து வருகிறது. மேலும் பன்றி காய்ச்சல் பாதிப்பும் இருந்து வருகிறது.

புதுச்சேரி: ஓரு வாரத்திற்கு பிறகு பள்ளிகள் இன்று முதல் திறப்பு

இந்நிலையில், புதுச்சேரியில் பெரியார் தி.க.,வினர் மற்றும் இந்து முன்னணியினர் முறையே இன்று 26ம் தேதி மற்றும் 27ஆகிய தேதிகளில் பந்த் போராட்டம் நடத்தப்படும் என, அறிவித்திருந்தனர்.இதில் இன்று நடைபெற இருந்த பந்தை, பெரியார் தி.க., வாபஸ் பெற்றது. இந்து முன்னணி அமைப்பினர் 27ம் தேதி பொது மக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் பந்த் போராட்டம் அறிவித்தபடி நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (இன்று) பள்ளிகள் திறக்கப்பட்டு திட்டமிட்டபடி காலாண்டு தேர்வு துவங்கும். மேலும் வரும் 30ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது. அதன் பிறகு ஒரு வார விடுமுறை அளிக்கப்பட்டு, அக்டோபர் 6ம் தேதி இரண்டாம் பருவத்திற்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது என, தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here