குழந்தை வரம் அருளும் பூசணி விதை எண்ணற்ற நன்மைகளை உடையது

0
24

குழந்தை பேறு என்பது வாழ்வின் மிகப் பெரும் பேறு அந்த பேறு பல புதுமண தம்பதிகளுக்கு கிடைப்பது அரிதான செயலாக அதிகரித்து வருகிறது. இயற்கை தரும் அழகான மருத்துவ குணங்களை கொண்ட காய்கறிகளை உண்டுவந்தால் சிறப்பான மாற்றத்தை பெறலாம் அந்த வகையில் பூசணி விதையும் குழந்தை வரம் அருளும் ஓன்றாக உள்ளது. மேலும், எண்ணற்ற மருத்துவ குணங்களுகளை பெற்ற விதையாகவும் இருக்கிறது.

இந்த பூசணியில் நார்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் இ, மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய தாதுச்சத்துகள் நிறைவாக காணப்படுகின்றன. இப்படி அதிகம் உள்ள பூசணி விதைகளை நாம் பயண்படுத்துவதே இல்லை. அதுதான் நம் உடலில் பல சத்துக் குறைபாடுகளுக்கும் நோய்களுக்கும் காரணமாக இருக்கிறது.

குழந்தை வரம் அருளும் பூசணி விதை எண்ணற்ற நன்மைகளை உடையது

பூசணி விதையின் நன்மைகள்:

  • பூசணி விதைகளில் அதிக அளவில் ஜிங்க் உள்ளதால் ஆண்களின் விந்துணுக்களின் வீரியத்தை மேம்படுத்தவும், உடலுறவின் போது எனர்ஜீயையும் தருகிறது. மேலும், ஆக்ஸிஜனேற்றங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவை மேம்படுத்துகிறது.
  • இரத்த அழுத்ததை குறைத்து மாரடைப்பு, பக்கவாதம், கொலஸ்ட்ரால் பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வாக இருந்க்கிறது.
  • உடல் பருமனை குறைப்பதிலும் அதிக பங்கு வகிக்கிறது. கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்ற துணைப் புரிகிறது.
  • பூசணி விதையில் காணப்படும் துத்தநாகச் சத்துக்கள் எதிர்ப்பு சக்தியை தருகிறது. சோர்வை நீக்கி உற்சாகமுடனும் சுறுசுறுப்புடனும் திகழ சிறந்த மருந்தாக காணப்படுகிறது.
  • பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளில் ஏற்படும் வெள்ளைப்படுதல் போன்ற மிக முக்கிய பிரச்சனைகளுக்கும் சிறந்த நிவாரணமாக இருக்கிறது. மேலும், இரும்பு சத்து இருப்பதால் ஆரோக்கியமான உடலையும் பெற முடியும்.
  • தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் பூசணி விதைகளை உட்கொண்டு வர தூக்கமின்மையிலிருந்து வெளிப்படலாம்.
  • சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் தாவர உணவுகளின் மூலம் கிடைக்கக்கூடிய ஒமேகா அமிலம் பூசணி விதைகளில் அதிக அளவில் இருக்கிறது.
  • பூசணி விதைகளில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள்ஸ் புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. பூசணி விதைகளை சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள சத்துக்கள் பெருங்குடல், புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.

இனியாவது பூசணி விதைகளை கீழே கொட்டாமல் அதை சமைத்து சாப்பிட்டு வந்து உடல் நலத்தை பேணி காத்து கொள்வது நம் கடைமையாக இருக்கிறது. தற்போது, குழந்தையின்மை பிரச்சனைகள் அதிகரித்துள்ள இது போன்ற காலங்களில் அதிகமாக பயண்படுத்தி கொள்வது சிறந்த புத்திசாலித்தனமாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்: பூசணி விதையை எப்படி சமைத்து சாப்பிடுவது

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here