அவதாராகவே மாறி ரசிகர்களை வரவேற்கும் புதுச்சேரி தியேட்டர் ஊழியர்கள்

0
6

புதுச்சேரி: ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான ‘அவதார்’ திரைப்படம் உலக அளவில் சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. இப்படி ஒரு சயின்ஸ் பிக்சன் படமா என இப்படத்தைப் பார்த்து வியக்காதவர்களே இல்லை. தற்போது இந்த படத்தின் இரண்டாம பாகமான ‘அவதார் தி வே ஆஃப் வாட்டர்’ உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியானது. படத்தை தமிழிலும் டப் செய்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வெளியிட்டுள்ளார்கள்.

putucherry theatre staffs make up by avatar characters

இந்நிலையில் ஒரு வித்தியாசமான முயற்சியாக ரசிகர்களை கவரும் நோக்கத்தில் புதுவை கடலூர் சாலை வணிக வளாகத்தில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் பணிபுரியும் ஊழியர்கள் அவதார் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் போன்றே வேடமணிந்து தியேட்டருக்கு வரும் ரசிகர்களை வரவேற்கின்றனர். மேலும் அவதார் போல் வேடமணிந்து வரவேற்கும்  ஊழியர்களுடன் தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here