in

மக்கள் நலக் கூட்டணியில் இணைவது குறித்து கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்: ஜி.கே.வாசன்

மக்கள் நலக் கூட்டணியில் இணைவது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களிடம் ஆலோசித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என அதன் தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.

முன்னதாக மக்கள் நலக் கூட்டணியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் சேர வலியுறுத்தி அதன் தலைவர்கள் 4 பேரும், ஜி.கே வாசனை சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலத்திற்குச் சென்ற மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், முத்தரன், திருமாவளன் ஆகியோர் வாசனை சந்தித்து பேசினர்.

அப்போது, மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க வேண்டும் என வாசனிடம் அவர்கள் வலியுறுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ, கூட்டணியில் வாசன் இணைவார் என நம்பிக்கை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vaiko G.K.Vasan Thirumavalavan

Watch Live News: Puthiyathalaimmurai TV Live
News Source: Puthiyathalaimurai

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0
Former Minister P.Chidambaram

சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி குறித்து காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும்: பா. சிதம்பரம்

How to Look Good in Photos

5 Tips on How to Look Good in Photos