தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறை நாட்கள் அறிவிப்பு. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு அக்டோபர் 1ம் தேதி முதல் 9ம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு அக் 1 முதல் 5ம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு.
தமிழ்நாட்டில் பயிலும் பள்ளி மாணவர்கள் கொரோனா தொற்றுக் காரணத்தால் இரண்டு வருடங்கள் பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் மாணவர்களின் படிப்பு மிகவும் பாதிக்கப்பட்டது. கொரோனா காலக்கட்டத்தில் குழந்தைகள் படிப்பை தொடங்காததால் இந்த ஆண்டு அவர்களுக்கு பள்ளி செல்வது மிகவும் கடினமாக உள்ளது.
எப்போது விடுமுறை வரும் என பல மாணவர்கள் நினைத்து கொண்டே இருக்கின்ற நிலை இருக்கிறது. இந்த ஆண்டு முதல் பள்ளி செல்லும் மாணவர்கள் பள்ளி படிப்பை பாரமாக நினைக்கின்ற சூழல் நிலவுகிறது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் செப்டம்பர் இறுதிக்குள் காலாண்டுத் தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டு பள்ளி அளவில் வினாத்தாள் தயாரித்து காலாண்டுத் தேர்வை நடத்திக்கொள்ளலாம் என்றும், தேர்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே முடிவு செய்துகொள்ளவும் கல்வித் துறை உத்தரவிட்டு இருந்தது.
இதையும் படியுங்கள்: கல்வித் திட்டம் என்பது வெறும் பட்டமளிப்புடன் முடிந்து விடும் விஷயமாக இருக்க கூடாது பிரதமர் மோடி
இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை தேதியை பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதன்படி 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.5-ம் தேதி வரையும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.9-ம் தேதி வரையும் விடுமுறை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தலதமிழ் இணையதளத்தை பாருங்கள்.