BIGG BOSS 6: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகம் மழுக்க ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழில் விஜய் டிவி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களை முடித்து 6 வது சீசனை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இந்த சீசனில் ஆரம்பம் முதலே சண்டை சச்சரவுகள் நிகழ்ந்து கொண்டே வருகிறதே தவிர விளையாட்டை சரியாக ஓருசிலர் தவிர யாரும் நல்ல முறையில் விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டு பிக்பாஸ் ரசிகர்கள் வைக்கும் முன்னத கருத்தாக இருக்கிறது.
இந்த சீசனில் முதன் முறையாக 21 பேர் அனுமதிக்கப்பட்டனர். இந்த சீசனையும் வழக்கம் போல உலக நாயகனே தொகுத்து வருகிறார். மக்கள் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. மக்கள் அளிக்கும் ஓட்டுகளின் அடிப்படையில் ஓவ்வொரு வாரமும் குறைந்த வாக்குகள் பெறும் ஹவுஸ்மெட்களில் ஓருவர் அல்லது இருவர் வெளியேற்றப்படுவர்.
இதுவரை 14 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இறுதியாக நேற்று விஜய் டிவி தொலைக்காட்சியில் ஓளிப்பரப்பான சரவணன் மீனாட்சி நாடகம் மூலம் பிரமபலான ரச்சிதா 90 நாட்களை கடந்து இருந்து வந்த நிலையில் வெளியேற்றப்பட்டார். ஆரம்பத்தில் சரிவர கவனம் இல்லாதவர் போல விளையாடி வந்த ரச்சிதா இறுதிக் கட்டத்தில் கவனமாக நிதானமாக விளையாடி வந்தார்.

இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஜி.பி.முத்து, அசல்கோளார், ஷெரினா, நிவாஷினி, சாந்தி, மகேஸ்வரி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, மணிகண்டா ரச்சிதா ஆகியோர் வெளியேறியுள்ளனார். தற்போது பிக்பாஸ் வீட்டில் விக்ரமன், அசீம், ஏடிகே, கதிர், அமுதவாணன், ஷிவின், மைனா நந்தினி உள்ளனர்.
இந்நிலையில், 13 வாரங்களை கடந்து 14 வாரத்தின் முதல் நாளில் அடி எடுத்து உள்ளது இந்த நிகழ்ச்சி அடுத்த வாரங்களில் யார் டைட்டில் வின்னர் என்ற அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
நேற்று வெளியேறிய ரச்சிதாவின் சம்பளம் பற்றிய அறவிப்பு தெரியவந்துள்ளது. அதன்படி, அவருக்கு ஓருநாளைக்கு 28,000 சம்பளமாக அறிவிக்கப்பட்டிருந்தது. 90 நாட்களுக்கு 26 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்: BIGG BOSS SEC 6: நான் மார்டன் என கூறி விருதை ஏற்க மறுத்த விக்ரமன்
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.