ராகி புட்டு செய்முறை:
தேவையான பொருட்கள்:
ராகி – 1/2 கி
தேங்காய் – 1/2 மூடி
வெல்லம் – 1 குண்டு
உப்பு – சிறிதளவு
செய்முறை:
ராகி மாவை ஒரு பாத்திரத்தில் சோ்த்து அதில் சிறிதளவு உப்பு சோ்த்து கிளறி விடவும். பின்பு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீா் தெளித்து கையால் மெதுவாக கிளறி விடவும். மாவு முழுவதும் ஈரப்பதம் இருக்குமாறு தண்ணீா் தெளித்து மெது மெதுவாக கிளறி விடவும். தேங்காயை நன்கு துருவி வைத்துக் கொள்ளவும். பின்பு இட்லி பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீா் ஊற்றி கொதிக்க விடவும். பின்பு இட்லி தட்டில் ஒரு துணி போட்டு மேலே மாவை பரவலாக போட்டு அதன் மீது தேங்காய் துருவலை போட்டு நன்கு வேகவிடவும்.
வெந்த மாவை கையில் தொட்டால் கையில் ஒட்டாமல் வருவதே மாவு வெந்து வந்ததற்கான பதமாகும். அதன்பிறகு வெந்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் வெல்லத்தை பொடித்து போட்டு நன்கு கிளறினால் சுவையான ராகி புட்டு ரெடி.
ராகி புட்டு உடம்புக்கு மிகவும் ஆரோக்கியமானதாகும். டயட் இருப்பவா்கள், சா்க்கரை நோயாளிகள் இந்த உணவை காலை உணவாக அருந்தி வருவதினால் உடல் நிலை சீராக இருக்கும். சா்க்கரை நோய் கட்டுக்குள் வரும். எண்ணெய் இல்லாமல் ஆவியிலே வேகவைத்து சமைப்பதால் அனைவாின் ஆரேகாக்கியத்திற்கும் ஏற்ற உணவாக ராகி புட்டு இருக்கும்.