புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவியை இழந்த நடிகர் ராகுல் தேவ், குழந்தை வளர்ப்பு குறித்து கருத்து ஓன்றை பதிவு செய்துள்ளார். இவரின் மனைவி 11 வருடங்களுக்கு முன் புற்றுநோயால் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளப் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் வந்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் ராகுல் தேவ். இவர் 1998ல் மனைவி ரீனா தேவியை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். இந்நிலையில், 2009ம் ஆண்டு ரீனா தேவிக்கு ஏற்பட்ட புற்றுநோயால் அவள் மிகவும் அவதியுற்று தன் உயிரை பறிக்கொடுத்தார்.
அதன் பின் எங்களது குழந்தையான மகன் ஓருவனை தான் ஓருவனாகவே வளர்த்து வந்துள்ளார். மனைவி இறந்ததும் பலர் மறுமணம் செய்து கொள்ளும் இக்காலக்கட்டத்தில் தன் மனைவியை மட்டுமே நேசித்து தன் ஓரு மகனுக்காகவே வாழ்வில் வாழ்ந்து வருபராகவும் அந்த குழந்தையின் நல்ல தகப்பனாகவும் வாழ்ந்து வருகிறார் என்றால் அது மிகையாகாது.

அவர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 10ல் கலந்து கொண்டு தன் அனுபவத்தையும் தனது மகனுக்கு தாயாகவும் தந்தையாகவும் இருக்க முயற்சித்தபோது தான் உணர்ந்த பாதுகாப்பின்மையைப் பகிர்ந்து கொண்டார். அவர் மேலும் கூறுகையில் விதவையாக இருக்கும் பெண்ணின் நிலை எப்படி இருக்குமோ அப்படி உணர்வதாக கூறியுள்ளார்.
படங்களில் எப்படி வேண்டுமானாலும் நடித்து விடலாம் நிஜ வாழ்க்கையில் அது மிகவும் வேதனைக்குறியதாகும் என்றும் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “பெற்றோர் வளர்ப்பு என்பது எளிதானது அல்ல. குழந்தைகளை வளர்ப்பதில் பெண்களின் பங்கு பெரியது, குழந்தைகளைப் புரிந்து கொள்ளும் விதம், ஒருவேளை அது அவர்களிடமிருந்து வெளிவருவதால் இருக்கலாம்.
குழந்தைகளிடம் அவர்கள் வைத்திருக்கும் பொறுமை, நான் நிறைய முயற்சித்தேன், ஆனால் பல நேரங்களில் நான் என் பொறுமையை இழந்துவிடுவேன். அப்பா, அம்மா இருவருமாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்.பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகளுக்குச் செல்லும் போது, நான் பெரும்பாலும் தாய்மார்களைப் பார்ப்பேன்.
என் மகனுக்காக நான் மட்டுமே செல்வேன் என் மனைவி இல்லாதது இப்போது பெரும் பாதிப்பாக இருக்கிறது. பள்ளியில் தாய்மார்கள் மட்டும் வரும்போது ஆண்கள் எங்கு எங்கே என்று நினைப்பேன். அந்த நேரத்தில், நான் ஆழ்ந்த பாதுகாப்பற்ற உணர்வை உணர்வேன், ” என்று நடிகர் கூறினார்.