ராகுல் காந்தியின் நடைபயணம் 2வது நாளில் அனிதாவின் குடும்பத்தினர் பங்கேற்பு

0
12

ராகுல் காந்தியின் நடைபயணம் 2வது நாளில் அனிதாவின் குடும்பத்தினர் பங்கேற்பு. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரை பாத யாத்திரையை நேற்று தொடங்கினார்.  

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 3500 கிலோ மீட்டர் தூரத்திற்கு “பாரத் ஜோடோ” என்ற யாத்திரையை காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியிடம் தேசிய கொடியை கொடுத்து நேற்று இந்த பாத யாத்திரையை தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

காந்தி நினைவு மண்டபம் முன்பாக தொடங்கிய இந்திய ஒற்றுமை பயணம், 600 மீட்டர் தொலைவில் உள்ள, கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையில் நிறைவடைந்தது. பின்னர், அகஸ்தீஸ்வரத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரி மைதானத்துக்கு சென்ற ராகுல் காந்தி, அங்கு கேரவனில் ஓய்வு எடுத்தார்.

ராகுல் காந்தியின் நடைபயணம் 2வது நாளில் அனிதாவின் குடும்பத்தினர் பங்கேற்பு

2-வது நாளான இன்று அகஸ்தீஸ்வரத்தில் இருந்து ராகுல் காந்தி நடை பயணத்தை தொடங்கினார். முன்னதாக தேசிய கொடியையும் அவர் ஏற்றி வைத்தார். நடை பயணத்தின் போது அரியலூர் மாணவியான அனிதாவின் குடும்பத்தார் ராகுலை சந்தித்து கோரிக்கை மனு ஓன்றை அளித்துள்ளனர்.

அதில் நீட் தேர்வால் 2017 ஆம் ஆண்டு என் தங்கை அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதனால் நாங்கள் மிகவும் துயரத்தில் இருக்கின்றோம். இனியும் பல உயிர்களை வாங்கும் நீட் தேர்வினை தடுக்க வேண்டும் என அனிதாவின் அண்ணன் அருண்குமார் மற்றும் தந்தை சண்முகம் தெரிவித்தனர்.

ராகுல் காந்தி அந்த மனுவை பார்த்து படித்து இதற்கு சரியான விடிவு பிறக்கும் என உத்தரவாதம் அளித்தார். குறிப்பிட்ட சில தொழிலதிபர்களுக்காகவே மோடி ஆட்சி செய்து வருகிறார்,. தொழிலதிபர்களின் தயவு இல்லாமல் மோடியால் ஆட்சியில் நீடிக்க முடியாது. அவர்களுக்கு தேவையான திட்டங்களை மட்டுமே நிறைவேற்றுவார். இந்திய மக்களை மோதவிட்டு லாபம் பார்த்த ஆங்கிலேயர் ஆட்சியை போன்றே மோடியின் ஆட்சியும் நடக்கிறது என்று குற்றம்சாட்டினார்.

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here