சிறுவன் ராகுல் கோலி: உலகில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருதாகும். அந்த வகையில் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு சென்றுள்ள குஜராத்தி படம் ‘லாஸ்ட் பிலிம் ஷோ’. தியேட்டரில் ஆபரேட்டர் அறையில் அமர்ந்து படம் பார்த்து பொழுதை கழிக்கும் சிறுவனின் வாழ்க்கையை பற்றிய படம்தான் லாஸ்ட் பிலிம் ஷோ. இது ஒரு குஜராத்தி படம். இந்த படம்தான் ஆஸ்கர் விருதுக்கு சென்றுள்ளது. சிறந்த வெளிநாட்டு பட பட்டியலில் இந்த படம் இடம் பெற்றுள்ளது. இந்த படம் சிறுவர்களின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ளதால் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் சில சிறுவர்கள் நடித்துள்ளனர். அதில் ராகுல் கோலியும் ஒருவன். இவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டடிருந்தான்.
வரும் 14ம் தேதி இவன் நடித்த லாஸ்ட் பிலம் ஷோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் ராகுல் நேற்று புற்றுநோயினால் மரணமடைந்தான். இது பற்றி அவனது தந்தை ராமு கோலி கூறும்போது, ‘கடந்த சில வருடத்துக்கு முன் படப்பிடிப்பில் ராகுல் நலமாக இருந்தான். சமீபத்தில் படத்தை பார்த்து ரசித்தான். தியேட்டருக்கு படம் வந்ததும் அதை தியேட்டரில் சென்று பார்க்கலாம் என்று கூறிக் கொண்டிருந்தான். இந்நிலையில் நேற்று முன்தினம் கடும் காய்ச்சல் ஏற்பட்டது. நேற்று ரத்த வாந்தி எடுத்தான். புற்றுநோய் அவனது உயிரை பறித்துக் கொண்டது’ என கண்ணீர் மல்க அவர் கூறினார்.