ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் முத்து இப்படம் இந்திய மட்டும் அல்லாது வெளிநாடுகளிலும் ரஜினி ரசிகர்களால் பார்க்கப்பட்டு பெரும் வசூல் சாதனை புரிந்து வந்தது. முக்கியமாக ஜப்பானில் எதிர்பார்க்காத அளவிற்கு படம் வசூல் சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது.
முத்து படத்தில் ரஜினி, சரத்பாபு, ராதாரவி, மீனா, செந்தில், ரகுவரன் என பலர் நடித்தனர். இன்றளவும் ரஜினி ரசிகர்கள் விரும்பும் திரைப்படமாக இருந்து வருகிறது. வெளிநாடுகளில் ரஜினிகாந்த்திற்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு அதன் காரணமாக இப்படம் 23 கோடி வரை இப்படம் வசூல் செய்து சாதனை செய்திருந்தது. அந்த வசூல் சாதனையை இதுவரை ஜப்பானில் வேறு நாட்டு படங்கள் முந்தியதில்லை.
இந்நிலையில், தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி உருவாக்கிய RRR திரைப்படம் அந்த வசூல் சாதனையை முந்திய புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது. இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்,ராம் சரண், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘ஆர்ஆர்ஆர்’. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில், மார்ச் 25-ம் தேதி வெளியான இந்தப் படம், ரூ.1,150 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது.

இது, கடந்த மாதம் ஜப்பானில் வெளியானது. இப்போது ‘ஆர்ஆர்ஆர்’ படம், ரூ.24 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ‘முத்து’ சாதனையை முறியடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுவரை வெளியான எந்த இந்திய படமும் ரஜினிகாந்த்தின் முத்து பட வசூலை வெல்லவில்லை. தற்போது ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வென்று வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளது.
இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.