ராஜராஜ சோழனின் பிறந்தநாள் விழா இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தஞ்சாவூரை மையமாக கொண்டு ராஜராஜ சோழன் ஆட்சி புரிந்து வந்தான். இவர் கட்டிய பெருவுடையார் திருகோவில் மிகவும் பிரசித்தம் பெற்றது. பொறியாளர்களே அசந்து பார்க்கும் கலை நுணுக்கங்கள் நிறைந்த கோபுரமாக இந்த கோவில் கோபுரம் அமைந்து கட்டப்பட்டுள்ளது. தமிழர்களின் கலை படைப்புக்கு சான்றாக இன்ஸ்கோவால் அங்கிகரிக்கப்பட்ட கோவில்.
இந்த பெருமைக்கு எல்லாம் ஊற்றுகாலாக இருந்தவர் ராஜராஜ சோழன் அவரின் பிறந்தநாளை சதய விழாவாக கொண்டாட தமிழகமே திரண்டு நிற்கிறது. அவருக்கு 1037 வது சதய விழா வருகின்ற 3ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக நகரம் முழுவதும் வண்ண விலக்குகளால் தஞ்சை மின்னுகின்றது.

மாமன்னன் ராஜராஜ சோழன் முடிசூட்டிய நாளே அவரின் பிறந்தநாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த நாளில் சதய நட்சத்திரமே அவரின் நட்சத்திரமாகவும் இருக்கின்றது.
இந்த நிகழ்வை ஓட்டி தமிழக அரசின் சார்பில் பேச்சுப்போட்டிகள், கருத்தரங்க போட்டிகள், கவிதை போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் என எண்ணற்ற போட்டிகள் மாணவ மாணவியருக்கு நடத்தப்படுகின்றது. நாட்டியாஞ்சலி போன்ற கலைகளும் நடைபெறுகின்றது.
நாளை கோவிலில் தேவார நூலுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, ஓதுவார்களில் வீதி உலா நடைபெறும். பின்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகளில் சார்பில் மாலை அணிவிக்கப்படும். அதனை தொடர்ந்து சிறப்பு யாகம் மற்றும் அபிஷேகம் நடைபெறும். பின்னர் மகா தீபாராதனையும் இரவு வீதிஉலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.
இந்த ராஜராஜ சோழனின் சதய விழாவை இனி தமிழக அரசு விழாவாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவினரிடையே வந்த கோரிக்கையை அடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர்.