துணிவு முதல் நாள் கொண்டாட்டத்தில் உயிரிழந்த பரத் குடும்பத்துக்கு ரஜனி ரசிகர்கள் உதவி

0
5

பரத்: கடந்த மாதம் ரோகிணி திரையரங்கம் அருகில் ‘துணிவு’ படம் பார்க்க சென்ற பரத் என்ற இளைஞர் உயிரிழந்தார். ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக செயலாளர் மற்றும் ரசிகர்கள் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து அவர்களுக்கு உதவித்தொகை வழங்கினர். ரஜினி ரசிகர் மன்றம் விருகம்பாக்கம் பகுதி செயலாளர் ரமேஷ் கோவிந்தராஜ் தலைமையிலானோர் பரத் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். இது குறித்து ரஜினி ரசிகர் மன்றம் விருகை செயலாளர் பேட்டியளிக்கையில்,

rajini fans clun donate 25 thousand for bharath family

‘ரசிகர் என்ற இனத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த மாதம் உயிரிழந்தார். அந்த வகையில் ரசிகர் என்ற வகையில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது அந்த குடும்பத்துக்கு உதவி செய்துள்ளோம். நடிகர் ரஜினிகாந்த் அவர்களே உதவி செய்யவேண்டும் என்றுதான் நினைத்திருப்பார். அவர் சார்பில் ரசிகர்கள் நாங்கள் உதவி செய்துள்ளோம். அந்த குடும்பத்துக்கு கல்வி, வேலைவாய்ப்பு தேவைப்பட்டால் அதற்கும் நாங்கள் உதவி செய்வோம்’ என்று கூறினார். பரத் குடும்பத்துக்கு ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் ரூ.25 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here