மறைந்த புனித்ராஜ் குமாருக்கு விருது வழங்கும் விழாவில் ரஜினிகாந்த்

0
19

மறைந்த கர்நாடக திரையுலகின் பிரபலமான முன்னணி நடிகராக வலம் வந்தவர் புனித்ராஜ் குமார் இவர் கடந்த ஆண்டு அக் 29ம் அன்று மாராடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரின் திரை வாழ்வையும் அன்பையும் கௌரவிக்கும் வண்ணம் கன்னட மாநிலத்தின் உயரிய விருதான ‘கர்நாடக ரத்னா விருது’ வழங்கப்பட உள்ளது அந்த விழாவில் கலந்து கொண்டு விருது வழங்க நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கன்னட திரை உலகின் முன்னணி நடிகராகவும் மனிதாபிமானத்தில் சிறந்தவராகவும் வலம் வந்தவர் புனித்ராஜ் குமார் இவர் கடந்த வருடம் 29.10.2011 அன்று தனது 46 வயதில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த உயிரிழப்பு கன்னட மட்டும் அல்லாது அவரை குருவாகவும் மனித சக்தியாகவும் நினைத்த அனைவருக்கும் பேர அதிர்ச்சியாக இருந்தது. அனைத்து திரையுலகத்தினரும் அவரின் உயிரிழப்பை கேட்டு மிகவும் வருத்தம் கொண்டனர்.

இந்நிலையில், அவரது கலைப்பணி மற்றும் மனிதாபிமான உள்ளத்தை போற்றும் வகையில் அவருக்கு கன்னட விருதுகளில் உயரிய விருதான கன்னட ரத்னா விருது வழங்க முதல்வர் பசவராஜ் பொம்மை முடிவு செய்திருந்தார்.

இதையும் படியுங்கள்: ரிஷப் ஷெட்டியை வீட்டிற்கு அழைத்து பாராட்டினார் நடிகர் ரஜினிகாந்த்

மறைந்த புனித்ராஜ் குமாருக்கு விருது வழங்கும் விழாவில் ரஜினிகாந்த்

அதன்படி, வருகின்ற நவம்பர் 1ம் தேதி வழங்க தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. கன்னட திரையுலகினருக்கும் நடிகர் ரஜினிகாந்திற்கும் இவ்விழாவில் பங்கு கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுபோல ஜூனியர் என்டியாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த இருவரில் ஓருவர் இந்த வருதினை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், உயரிய கன்னட ரத்னா விருதை வாங்கும் 10 வது நபராக மறைந்த புனித்ராஜ் குமார் உள்ளார்.

இதற்கிடையில், கன்னட திரையுலகில் சிறப்பான திரைப்படத்தை வழங்கிய ரிஷப் ஷெட்டியை தனது இல்லத்திற்கு அழைத்து காந்தாரா படத்தின் வெற்றியை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here