PS-1 படக்குழுவிற்கும் ஜெயம் ரவிக்கும் வாழ்த்துக் கூறிய ரஜினிகாந்த்

0
6

PS-1 படக்குழுவிற்கும் அருண்மொழி வர்மனாக நடித்த ஜெயம் ரவிக்கும் போன் மூலம் வாழ்த்துக் கூறிய தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் பல வருட கனவுகளுக்கு மத்தியில் வெளியாகி திரையரங்குகளில் HOUSE FULL லில் கலக்கி வருகின்றது. மிக பிரம்மாண்ட முறையில் எடுக்கப்பட்ட வரலாற்று புதினத்தை படமாக்கிய பெருமை இயக்குனர் மணிரத்னத்தையே சாரும்.

இப்படத்தில் விக்ரம், கார்த்திக், ரகுமான், ஜெயம்ரவி, பிரபு, விக்ரம்பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷிமி, பிரகாஷ்ராஜ் என பல முன்னணி கதாநாயகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து பாடல்கள் அனைத்தும் மிக பெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தை சுபாஷ்கரன் தயாரிப்பான லைக்கா நிறுவனம் தயாரிப்பு பணிகளை செய்துள்ளது. இப்படம் கடந்த 30ம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. இப்படம் உலக அளவில் 300 கோடியை நெருங்கி வசூல் செய்து வருகின்றது.

PS-1 படக்குழுவிற்கும் ஜெயம் ரவிக்கும் வாழ்த்துக் கூறிய ரஜினிகாந்த்

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தை பார்த்து விட்டு பொன்னியின் செல்வன் படக்குழுவிற்கு வாழ்த்து கூறியுள்ளார். அதன் பின் ஜெயம் ரவிக்கு போன் செய்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: ஐஸ்வரியா ராஜேஷின் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் ரீலிஸ் தேதி அறிவிப்பு 

இது குறித்து நடிகர் ஜெயம் ரவி தன் டிவிட்டர் பக்கத்தில் இதனை விரிவாக கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் தொலைபேசி அழைப்பு தன்னுடைய நாளையும், வருடத்தையும் சிறப்பாக்கியதாக தெரிவித்திருக்கிறார். அத்துடன் தன்னிடைய திரைப்பயணத்திற்கு புது அர்த்தம் கிடைத்துள்ளதாகவும் நெகிழ்ந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் படத்தைப் பற்றியும் படத்தில் தன்னுடைய நடிப்பு பற்றியும் பாராட்டியது ஆசீர்வதிக்கப்பட்டது போல் உணர்வதாக கூறியுள்ளார்.

PS-1 பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர். இதனால் இப்படத்தின் அடுத்த 2ம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டு உள்ளனர்.

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here