ரஜினிகாந்த்: சென்னையில் நடந்த ஒரு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது.
‘இன்றைக்கு நான் 73 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் மனைவி. இளமைக்காலத்தில் கெட்ட நண்பர்கள் இருந்த காரணத்தால், பல கெட்ட பழக்கவழக்கங்களும் இருந்தது. தினமும் தண்ணி அடிப்பேன், தினமும் இரண்டு வேளை அசைவம் சாப்பிடுவேன், பாக்கெட் கணக்கில் சிகரெட் புகைப்பேன். நான் கண்டக்டராக இருந்த காலத்திலேயே இப்படி இருந்தேன் என்றால், சினிமாவில் பணம், புகழ் வந்த பிறகு எப்படி இருந்திருப்பேன் என்று புரிந்து கொள்ளுங்கள். சைவ உணவு உண்பவர்களை பார்த்தால் எனக்கு பரிதாபமாக இருக்கும்.
புகைப்பிடித்தல், மது அருந்துதல், அசைவ உணவு சாப்பிடுதல் இந்த மூன்றையும் தொடர்ந்து செய்தால் அது டெட்லி காம்பினேஷன். இந்த மூன்று பழக்கங்களையும் வைத்திருப்பவர்கள் 60 வயதிற்கு மேல் வாழ்வது சிரமம். அப்படி வாழ்ந்தாலும் படுக்கையில்தான் வாழ்வார்கள். நானும் அப்படித்தான் இருந்திருப்பேன். அதை அன்பால் மாற்றியவர் என் மனைவி. என் வாழ்க்கையில் டிசிப்ளினை கொண்டு வந்தவர் அவர்தான்’ என்று ரஜினிகாந்த் தன் மனைவியை புகழ்ந்து பேசினார்.