ரஜினிகாந்த் கன்னட மாபெரும் நடிகர் மறைந்த புனித்ராஜ் குமாருக்கு வழங்கும் ‘கன்னட ரத்னா விருதினை’ அவரின் மனைவி அஸ்வினியிடம் கன்னட முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் சூப்பர் ஸ்டார், ஜினியர் என்டிஆர் வழங்கி கௌரவித்தனர்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் புனித்ராஜ் குமார் கடந்த ஆண்டு 2021 அக்டோபர் 29ம் தினத்தில் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதை அறிந்த கன்னட திரையுலகத்தினர் மற்றும் அவரது ரசிகர்கள் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்தனர். அவர் மறைந்து ஓராண்டு நிறைவடைந்தது.
இந்நிலையில், புனித் ராஜ்குமார் மறைவையடுத்து அவரது கலைப்பணி மற்றும் சமூக சேவை ஆகியவற்றை கருத்திற்கொண்டு அவருக்கு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என கர்நாடகா முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்தார்.

இந்த விருதை வழங்குவதற்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இன்று தனி விமானம் மூலம் நடிகர் ரஜினிகாந்த் பெங்களூர் சென்று விழாவில் கலந்து கொண்டு மறைந்த கன்னட நடிகர் புனித்ராஜ் குமாரின் மனைவி அஸ்வினியிடம் கன்னட ரத்னா விருதை அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, ரஜினி, என்டிஆர் மூவரும் சேர்ந்து விருதினை வழங்கி கௌரவித்தனர்.
அப்போது பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினி “நடிகர் புனித் ராஜ்குமாருக்கு விருது வழங்கும் இந்த தினத்தில் மழை வந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் அவர்களது குடும்பத்திற்கு இறைவன் அருள் இருக்கிறது. அவர் இறைவனின் பிள்ளை” என்று பேசினார்.