ஏ.ஆர்.ரகுமான் தற்போது புதிய பரிமானமாக திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார். ‘லி மஸ்க்’ என்ற படத்தை இயக்கி தன் பன்முகத் தன்மையை வெளிப்படுத்திருக்கிறார். இந்த படத்தின் சிறப்பு விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் உருவான படமாகும். இந்த படத்தை நடிகர் ரஜினிகாந்திற்கு போட்டு காட்டியுள்ளார்.
ரகுமான் பல மொழி பாடல்களுக்கு உயிர் கொடுத்து வந்திருக்கிறார். இந்திய அளவிலும் இவரது இசைத்த பாடல்களுக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகின்றது. திரையுலகிற்கு 30 ஆண்டு காலமாக இசையின் மூலம் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று இருப்பவர்.
இந்த நிலையில், புதிய முயற்சியாக இயக்கத்திலும் தன் கவனத்தை செலுத்தி வருகிறார். இதற்கு முன்னர் 2019ல் ’99 சாங்ஸ்’ என்ற படத்திற்கு கதை எழுதி இசையமைத்திருந்தார். அது போல தற்போது லி மஸ்க் என்ற படத்தை முதன் முறையாக இயக்கியுள்ளார். இப்படம் 36 நிமிடங்கள் மட்டுமே திரையிடப்படும் இப்படம் விர்ச்சுவல் ரியாலிட்டி என்ற தொழில் நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ மூலம் திரைப்படங்களை காண்பதற்கு பிரத்யேக கண்ணாடி போன்ற கருவி கொடுக்கப்படுகிறது. மேலும் பார்வையாளர் அமரும் நாற்காலியானது, திரைப்படத்தில் வரும் காட்சிக்கு ஏற்ப அசைவுகளை கொடுக்கிறது. இதனால் பார்வையாளர்கள் காட்சிக்குள் சென்றது போன்ற தத்ரூபமான அனுபவத்தைப் பெறுகிறார்கள்.
இதையும் படியுங்கள்: பிக்பாஸில் இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் முழு விபரம்
இந்த திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கே உரிய ஸ்டைலில் அமர்ந்து பார்த்துள்ளார். இதனை தன் இன்ஸடாவில் பதிவிட்டுள்ளார் இசைப்புயல். இதனை பார்த்த ரஜினி ரகுமானை பாராட்டி உள்ளார்.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுஙகள்.